கடந்த மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநில பேரவைகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் நாளை (ஏப். 9) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப். 23-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக ஏப். 23, 29-இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்துக்குப் பின்னர், 5.67 கோடி வாக்காளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின்னர், நீக்கப்பட்ட வாக்காளர்களில் இருந்து மீண்டும் பதிவு செய்த 6.36 லட்சம் பேருடன் சேர்த்து 5.73 கோடி பேர் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 18 முதல் 19 வரையிலான முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை கடந்த மக்களவைத் தேர்தலைவிட 33.6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 10.9 லட்சமாக இருந்த முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் 14.9 லட்சமாக உயர்ந்துள்ளது.
எஸ்ஐஆர் நடவடிக்கையால், வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடியாக குறைந்துள்ள போதிலும், முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1.8 சதவிகிதத்திலிருந்து 2.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
மொத்தமுள்ள 5,73,43,291 வாக்காளர்களில், 2,93,04,905 பெண்களும், 2,80,30,658 ஆண்களும், 7,728 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 12.74 லட்சம் பேர் அதிகமாகவுள்ளனர்.
Summary
The number of first-time voters in Tamil Nadu in the 18-19 age group has increased by around 33.6% from 10.9 lakh, during the 2024 Lok Sabha polls, to 14.6 lakh now, as per the figures released by the office of the Chief Electoral Officer in Chennai on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காங்கிரஸ் உறவு முறிவு; நாடாளுமன்றத்தில் திமுக தனித்து அமரும்! - கனிமொழி கடிதம்

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!

முதல்முறை வாக்காளர்களே.. வாக்களிப்பது எப்படி என அறிய ஆவலா?

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

