தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் குவியும் பொறியியல் மாணவர்களின் புகார்கள்!

தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் பொறியியல் கல்லூரி மாணவர்களின் புகார்கள் அதிகரித்து வருவது பற்றி...

Published On :24 அக்டோபர் 2026, 10:55 am IST

தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு வரும் புகார்களின் பட்டியலில், தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கலந்தாய்வு மூலம் சேர்ந்த மாணவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன.

தமிழக முதல்வரிடம் மக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அளிக்கும் வகையில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து, http://cmcell.tn.gov.in/register.php என்ற இணைய முகவரியில் மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்து, புகார் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் இந்த இணையதளத்தின் மூலம் அறிந்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

இந்த தனிப்பிரிவுக்கு வரும் புகார்களில், தற்போது மாணவர்கள் அளிக்கும் புகார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கை பெற்ற மாணவர்களிடமிருந்து நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் சான்றிதழ்களை திரும்ப வழங்க கால தாமதம் செய்வது, கல்லூரி விடுதிகளில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை, போதிய பேராசிரியர்கள் இல்லை, தேர்வுகள் முறையாக நடத்தப்படுவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகம் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 500 புகார்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு வந்திருப்பதாகவும், இவை அண்ணா பல்கலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ரூ.55 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அது இதுவரை மறு ஆய்வு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ், மாணவர்களிடமிருந்து தனியார் கல்லூரிகள் கூடுதல் கட்டணத்தை வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Summary

Complaints from engineering students pile up in the Tamil Nadu Chief Minister’s special cell!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.