பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்போர் தயாராக வைத்திருக்க வேண்டியவை!

ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்..

JEE Main 2027  Exam

ஜேஇஇ தேர்வு - IANS

Published On :21 அக்டோபர் 2026, 5:37 pm IST

வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதத்தில் நடைபெறவிருக்கும் ஜேஇஇ தேர்வு தேதிகள் எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம்.

எனவே, ஜேஇஇ முக்கிய தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், ஐந்து முக்கிய ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

முதலில், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்.

இரண்டாவது, ஆதார் அட்டை. இதில் இருக்கும் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழுடன் மிகச் சரியாக ஒத்துப்போக வேண்டும்.

ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உடனடியாக விண்ணப்பித்து திருத்தங்களை மேற்கொண்டு புதிய ஆதார் கார்டை தயாராக வைத்துக் கொள்ளவும்.

அடுத்து பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம். இதற்கு பின்னணியில் எந்த நிறமும் இருக்கக் கூடாது. வெள்ளை பின்னணியில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

புகைப்படம் எடுக்கும்போதே, அதன் சாஃப்ட் காப்பியை கேட்டுக் பெற்றுக் கொண்டு, அதனை 10 - 200 கேபிக்குள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வெள்ளைத் தாளில் உங்கள் கையெழுத்தை எழுதி அதனை புகைப்படம் எடுத்து சாஃப்ட் காப்பியாக மாற்றி அந்த புகைப்படத்தை 10 - 30 கே.பி.க்குள் வைத்துக் கொள்ளவும்.

மேலும், ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினரைச் சேர்ந்தவராகவோ அல்லது மாற்றுத்திறநாளியாக இருந்தாலோ அதற்குரிய சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.

இவற்றை தயாராக வைத்துக் கொண்டால், ஜேஇஇ விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எளிது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.