பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நீட்-மறுதேர்வெழுதும் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களும் விளக்கமும்!

நீட்-மறுதேர்வெழுதும் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களும் விளக்கங்களும்

News image

நீட் தேர்வு - Center-Center-Chennai

Updated On :21 மே 2026, 4:38 pm IST

ஜூன் மாதம் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வை எழுதும் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு தேசிய தேர்வு முகமை பதிலளித்துள்ளது.

தேசிய தேர்வு முகமையில் மாணவர்கள் தங்களது வங்கிக் கணக்குகளைப் பதிவு செய்ய புதிய இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுவாக எழும் கேள்விகளை பட்டியலிட்டு, அதற்கான விளக்கத்தையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, நிகழாண்டு மே 3-ஆம் தேதி 22 லட்சம் போ் எழுதிய இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்பட்டு, மறு தேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேள்விகள் - விளக்கம் - என்டிஏவின் அறிக்கை

தேர்வுக் கட்டணம் திருப்பி வழங்கப்படுகிறதா?

விளக்கம்: தற்போதைய முகவரி விவரங்களைப் புதுப்பிப்பதற்கான வசதியும், இரண்டு நகரங்களைத் தேர்ந்தெடுக்கும் வசதியும் தேர்வர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்வுக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்காக வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்வதற்கான வழிமுறை ஏற்படுத்தப்படுகிறது.

தேர்வு மொழியை மாற்ற முடியுமா?

இல்லை. விண்ணப்பப் படிவத்தை முன்னதாகச் சமர்ப்பிக்கும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு மொழியே இறுதியானது, அதை மாற்ற முடியாது.

விண்ணப்பப் படிவத்தை நிரப்பும்போது புதுப்பிக்கப்பட்ட படிவத்தில் முகவரி மற்றும் மொழியின் அடிப்படையில், நகரத்தை தேர்வு செய்வதும், தேர்வு மொழியை மாற்ற இயலவில்லை என்றும் ஒரு செய்தி தோன்றுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரரால் முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு மொழி நிலையானது என்றும், இந்தக் கட்டத்தில் அதை மாற்ற முடியாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள், கிடைக்கப்பெறும் மொழித் தேர்வுகள் மற்றும் அதற்கேற்ற மாநிலங்கள்/இடங்கள் குறித்து NEET (UG)-2026 தகவல் கையேட்டின் பிரிவு 4, பத்தி 6(ix)-ஐப் பார்க்கவும்.

முன்பு தேர்வெழுதிய அதே மையம் மறுதேர்வுக்கும் ஒதுக்கப்படுமா?

தேர்வர் தேர்ந்தெடுக்கும் நகரத்தின் அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுகின்றன. எனவே, மறுதேர்விற்காக ஒதுக்கப்படும் தேர்வு மையம், முந்தைய மையமாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை.

மறுதேர்வுக்கான தேதி மற்றும் நேரம் என்ன?

நீட் (யுஜி)-2026 மறுதேர்வு, 21 ஜூன் 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 05:15 மணி வரை,

முறையான நடைமுறைகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டு நடத்தப்படும்

கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுவது ஏன்?

ஆவணங்களைப் பூர்த்தி செய்வதற்கும், சரிபார்ப்பதற்கும், மற்றும் தேர்வு தொடர்பான பிற நடைமுறைகளுக்கும் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படுகின்றன.

மே 3ஆம் தேதி தேர்வு மையத்தில் குறைபாடுகளை சந்தித்திருந்தால் என்ன செய்வது?

நீட் தேர்வர்கள் தங்களது புகார்கள்/குறைகளை, அதற்கான ஆதார விவரங்கள்/ஆவணங்களுடன், neetug2026@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் உள்ள NTA உதவி மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முந்தைய நீட் தேர்வு மையம் வெகு தொலைவில் அமைந்திருந்தது. இப்போது என்ன செய்யலாம்?

நீட் தேர்வர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த நகரங்களின் அடிப்படையில், தேர்வு மையங்கள் ரேண்டம் முறையில் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

நீட் மறுதேர்வு, மற்ற தேர்வு தேதிகளுடன் இணைந்து வருகிறது. தேர்வு தேதி மாற்றப்படுமா?

இல்லை. மறு தேர்வு தேதி உறுதி செய்யப்பட்டுவிட்டது. மாற்றப்படாத.

மறுதேர்வுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டுமா?

இல்லை. மறுதேர்வு எழுதும் மாணவர்கள் எந்தக் கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Doubts and clarifications for students re-writing NEET

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.