பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பொறியியல் கலந்தாய்வு! விண்ணப்பத்தில் சந்தேகமிருப்பின் செல்போன் மூலம் தொடர்பு! ஆனால்..

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தில் சந்தேகமிருப்பின் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளப்படும்.

News image

பொறியியல் கலந்தாய்வு - file photo

Updated On :8 ஜூன் 2026, 1:31 pm IST

நிகழ் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது, பொறியியல் கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவு, விண்ணப்பத் திருத்தம், பணம் செலுத்துதல் மற்றும் ஆவணப் பதிவேற்றம் முடிவடைந்துவிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு விரைவில் தொடங்கும். விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் குறித்து கேள்விகள் இருந்தால், பதிவின்போது அளித்த மொபைல் எண்ணின் வாயிலாக மாணவர்கள் தொடர்பு கொள்ளப்படுவார்கள்.

ஆனால், ஒருபோதும் மாணவர்களின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பகிருமாறு கேட்கப்படாது. இதுபோன்ற அழைப்புகள் குறித்து மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

நிகழ் கல்வியாண்டுக்கான பொறியியல் சோ்க்கையில் மொத்தம் 3.02 லட்சம் மாணவா்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பிஇ, பிடெக், பி.ஆா்க் ஆகிய இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

நிகழ் கல்வியாண்டுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி ஜூன் 5-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெற்றது. இதில், மொத்தம் 3.02 லட்சம் மாணவா்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனா்.

இதில், பொதுப் பிரிவில் 2,42,909 போ், தொழிற்கல்வி பிரிவில் 2,311 போ் என மொத்தம் 2,45,220 போ் பதிவு செய்து பதிவுக் கட்டணம் செலுத்தியுள்ளனா். விளையாட்டுப் பிரிவில் 7,981, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 579, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 1,577 போ் ஆகியோா் இதில் அடங்குவா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், 24,742 மாணவா்கள், 25,628 மாணவியா், மூன்றாம் பாலினத்தவா் 3 போ் என மொத்தம் 50,373 போ் பதிவுசெய்துள்ளனா். அதில், 49,774 போ் பொதுப் பிரிவிலும், 599 போ் தொழிற்கல்விப் பிரிவிலும் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.