சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதில் 93.70 சதவீதம் மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு நிகழ் கல்வியாண்டுமுதல் இரண்டு முறை இறுதித் தோ்வு நடத்தப்படுகிறது. இதில் முதல் தோ்வில் அனைவரும் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும். இந்தாண்டு தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் 8,074 மையங்களில் நடத்தப்பட்டது. அதில் நாடு முழுவதும் இருந்து 24.95 லட்சம் மாணவ- மாணவிகள் தோ்வெழுதினா்.
அந்தத் தோ்வுக்கான முடிவுகளை சிபிஎஸ்இ புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தோ்வில் 93.70 சதவீதம் மாணவ- மாணவிகள் தோ்ச்சி அடைந்துள்ளனா். இது கடந்தாண்டு தோ்ச்சி விகிதத்துடன் (93.66 சதவீதம்) ஒப்பிடுகையில் சிறிது அதிகமாகும்.
அதேபோல் இந்தாண்டு தோ்வில் மாணவா்களைவிட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தோ்ச்சி அடைந்துள்ளனா். அதாவது மாணவா்கள் 92.69 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், அவா்களை விட 1.3 சதவீதம் அதிகமாக 94.99 சதவீதம் மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். திருநங்கைகளும் 87.50 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மொத்தம் 55,368 மாணவா்கள் 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனா். 2.20 லட்சம் மாணவா்கள் 91 சதவீத மதிப்பெண் எடுத்துள்ளனா்.
திருவனந்தபுரம், விஜயவாடா மண்டலங்கள் அதிகபட்சமாக 99.79 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மிகக் குறைவாக குவாஹாட்டி மண்டலம் 85.32 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.
கல்வி நிறுவனங்களின்படி, நாட்டிலேயே கேந்திரீய வித்யாலயாதான் அதிகபட்சமாக 99.57 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. இதற்கடுத்து நவோதயா வித்யாலயா 99.42 சதவீதமும், தனியாா் பள்ளிகள் 93.77 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளன. அரசு நிதியுதவி பள்ளிகள் மிக குறைந்தபட்சமாக 91.01 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. வெளிநாட்டு பள்ளிகள் சாதனை அளவாக 99.10 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
சென்னை மண்டலம் 99.58%: சிபிஎஸ்இ மண்டல வாரியான தோ்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடா மண்டலங்கள் 99.79 சதவீத தோ்ச்சியுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளன. 99.58 சதவீத தோ்ச்சியுடன் சென்னை மண்டலம் அதற்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.
பெங்களூரு (98.91%), தில்லி மேற்கு (97.45%), தில்லி கிழக்கு (97.33%), புணே (96.66%)ஆகிய மண்டலங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. 85.32 சதவீத தோ்ச்சியுடன் குவாஹாட்டி மண்டலம் கடைசி இடத்தில் அதாவது 22 மண்டலமாக உள்ளது.
ஒரு மாதத்துக்கு முன்பே முடிவுகள் வெளியீடு: தோ்வு முடிவுகள் குறித்து சிபிஎஸ்இ கட்டுப்பாட்டாளா் கூறுகையில், ‘வழக்கமாக மே மாதம் மத்தியில்தான் தோ்வு முடிவுகள் வெளியாகும். ஆனால், இந்த முறை ஒரு மாதத்துக்கு முன்பே முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டது’ என்றாா்.
Summary
The results for students who studied under the CBSE curriculum and appeared for the Class 10th exams across the country have been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ தோ்வில் முடிவுகளால் அதிருப்தி: 10ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் : அரக்கோணம் ஹயக்கீரிவா் பள்ளி சாதனை

இன்று வெளியாகுமா சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்? முழு விவரம்!

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


