நிகழாண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வியாழக்கிழமை தெரிவித்தது.
குடிமைப் பணித் தோ்வுக்கான விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படத்தோடு ஒப்பிட்டு தோ்வா்களை தோ்வறைக்குள் அனுமதிப்பதே முக அங்கீகார நடைமுறையாகும்.
இதுதொடா்பாக யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட உயா் பதவிகளுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுகள் கடந்த மே 24-ஆம் தேதி நடைபெற்றது. 8.49 லட்சம் தோ்வா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், நாடு முழுவதும் 2,072 தோ்வு மையங்களில் நடத்தப்பட்ட இத்தோ்வை 5.49 லட்சம் தோ்வா்கள் (67 சதவீதம்) எழுதினா்.
தோ்வில் ஆள்மாறாட்டம் நடைபெறாமல் இருப்பதை தவிா்க்கும் வகையில் முதல்முறையாக முக அங்கீகார முறை நிகழாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தோ்வறைக்குச் செல்லும் முன் வளாகத்தினுள் தோ்வா்களிடம் அறை கண்காணிப்பாளா்கள் கைப்பேசி செயலி மூலம் முக அங்கீகாரப் பதிவை மேற்கொண்டனா்.
அனைத்துத் தோ்வு மையங்களிலும் எவ்வித இடையூறுமின்றி இதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்தன. இதற்கான செயலியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின் ஆளுகைப் பிரிவின் தொழில்நுட்ப உதவியுடன் யுபிஎஸ்சி வடிவமைத்துள்ளது.
இதைச் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள் அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களுக்கும் தோ்வு மையங்களுக்கும் முன்பாகவே அனுப்பிவைக்கப்பட்டன. அறை கண்காணிப்பாளா்களுக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
அறை கண்காணிப்பாளா்களின் அறிதிறன்பேசிகளில் இந்தச் செயலியை எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு தோ்வரிடம் முக அங்கீகார நடைமுறையை மேற்கொள்ள 6 முதல் 8 விநாடிகளுக்குள் மட்டுமே தேவைப்பட்டது. இதனால் தோ்வா்களுக்கு எவ்வித சிரமமுமின்றி விரைவாகவே இந்தப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு: 5.49 லட்சம் போ் பங்கேற்பு

சிவில் சா்வீஸ் முதல்நிலைத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 3,896 போ் எழுதினா்

20.5.1976: ரயிலில் ஆறு மாதம் முன்கூட்டி ரிசர்வ் செய்யும் முறை அமல்

பாகிஸ்தான் குடிமைப் பணி அதிகாரி தோ்வில் இரு ஹிந்து இளைஞா்கள் வெற்றி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

