லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

'பாதிப்பு தெரிந்தவுடன் உடனே மருத்துவரை அணுக வேண்டும்'

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால் குணப்படுத்த முடியும் என்று நோயிலிருந்து குணம் பெற்ற பெண் குறிப்பிடுகிறார்.

கோப்புப்படம்

Published On :7 பிப்ரவரி 2024, 3:37 pm IST

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால் குணப்படுத்த முடியும்,  'பாதிப்பு தெரிந்தவுடன் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார் இந்த நோயிலிருந்து குணமடைந்த பெண்.

புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதேவேளையில், நம்பிக்கை அளிக்கும் வகையில் லட்சக்கணக்கானோர் குணமடைந்தும் வருகின்றனர்.

அதிலும் பெண்களை அதிக அளவில் பாதிக்கும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றால் முழுமையாகக் குணமடைய முடியும் என்கிறார் இந்த நோயிலிருந்து மீண்ட திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சலைச் சேர்ந்த ஈஸ்வரி (50).

அவர் மேலும் கூறியதாவது:

"எனக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பாக மார்புப் பகுதியில் சிறிய அளவிலான கட்டி தெரிந்தது. இதை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அப்படியே விட்டுவிட்டேன். ஆனால், சில நாள்களிலேயே கட்டி தோன்றிய இடத்தில் வலி ஏற்படத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, குமார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டேன். அப்போது எனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அங்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன். தற்போது என்னால் மற்றவர்களைப்போல அனைத்து வேலைகளையும் செய்ய முடிகிறது. புற்றுநோய் பாதித்த காலகட்டத்தில் எனது கணவரும், இரு மகள்களும் எனக்குத் துணையாக இருந்ததுடன், தன்னம்பிக்கையையும் அளித்தனர்.

மார்பகப் புற்று நோய் என்பது எளிதில் குணமாக்கக் கூடியதுதான். இந்த நோய் பாதிப்பு தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக எனது தாயும் இந்த  நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் எனக்கும் வந்திருக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" என்றார் ஈஸ்வரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.