தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மீண்டும் என் அப்பா இயக்கத்தில் நடிப்பேனா? ரசிகரின் கேள்விக்கு விஜய் அளித்த பதில்!

தன் தந்தையுடன் இயக்கத்தில் நடிப்பது குறித்து விஜய்...

News image

தன் தந்தை எஸ். ஏ. சந்திர சேகருடன் விஜய்.

Updated On :22 ஜூன் 2026, 9:30 am IST

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் மீண்டும் நடிப்பீர்களாக என்கிற கேள்விக்கு தற்போதையை முதல்வர் விஜய் அளித்த பதில்.

அன்புள்ள அண்ணன் விஜய்க்கு... உங்கள் ரசிகன் செந்தில்குமார் எழுதுவது....

அண்ணா எந்த வேலை இருந்தாலும் நிறுத்திவிட்டு உங்கள் படங்கள் என்றால் பார்த்துவிடுவேன். நாளைய தீர்ப்பிலிருந்து இன்று செல்வா வரை அனைத்து படங்களையும் நான் பார்த்துவிட்டேன். எனக்கு மனசுக்கு கவலையா இருந்தா நான் உங்கள் படத்துக்குத்தான் போவேன். எங்கள் வீட்டில் உங்கள் படங்களை அவ்வளவா பார்க்க மாட்டாங்க. ஆனால், இப்போதெல்லாம் உங்கள் படங்களை ரசிச்சி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

என் தங்கச்சி என்னைவிட உங்கமேலதான் அதிக பாசமா இருக்கா... இந்தக் கடிதம் எழுதும்போது அவளும்கூட இருந்தாள். இந்த லட்டரை பிடுங்கி அவ... விஜய் அண்ணனுக்கு முத்தம் கொடுக்கப் போறேன் என்று லட்டர் முழுதும் முத்தம் கொடுத்தாள்.

நாங்கள் குடும்பத்துடன் சென்று செல்வா படம் பார்த்தோம் . அப்பொழுது நீங்கள் அருவியில் சண்டை போட்டு தண்ணீரில் விழும்போது என் தங்கை பயந்து அழுதாள்... அப்பொழுது நான் விஜய் அண்ணனுக்கு ஒண்ணும் ஆகாது, பயப்படாதே என்று ஆறுதல் சொன்னேன். அவள் சின்னப்பிள்ளை என்பதால் பயப்படுகிறாள்.

என் தங்கை உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று சொல்கிறாள். நாங்கள் சென்னைக்கு வந்தால் உங்களைப் பார்க்க முடியுமா... பார்க்க விடுவார்களா..?.

உங்கள் படம் அடுத்தது எது வருகிறது...? இனி உங்கள் அப்பா எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் நடிக்க மாட்டீங்களா.... உங்களுக்கு எங்களின் பொங்கல் வாழ்த்துகள்.

இப்படிக்கு

உங்கள் தம்பி செந்தில் குமார்

தூத்துக்குடி.

--------------------

தம்பி செந்தில்குமார் அவர்களுக்கு.

அண்ணள் விஜய் எழுதுவது...

உங்கள் கடிதம் கிடைத்தது, மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் மனசுக்கு கவலையாக இருக்கும்போது என்னோட படத்தைப் பார்த்து நீங்கள் சந்தோஷமா இருப்பீங்க என்று எழுதியிருந்தீங்க அதை நினைக்கும்போது எனக்குச் சந்தோஷமா இருக்கிறது. உங்கள் தங்கையின் முத்தத்தைக் கடிதத்திலே இருந்து நான் எடுத்துக் கொண்டேன். உங்கள் தங்கை உங்களை விட என்மீது பாசமாக இருக்கிறாள் என்று எழுதியிருந்தீர்கள். உங்கள் தங்கையை நான் ரொம்பவும் விசாரித்ததாகக் கூறுங்கள்.

Story image

அவள் என் மீது வைத்திருக்கும் பாசத்திற்கு நான் அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் அவளை நன்றாகப் படிக்க வையுங்கள். உங்கள் குடும்பத்தினர் யாவரையும் நான் விசாரித்ததாகக் கூறுங்கள். அடுத்து வெளிவருகிற என்னோட படம் எதுவென்று கேட்டு எழுதியிருந்தீர்கள். இனி எங்க அப்பா எஸ்.ஏ. சந்திர சேகரன் அவர்கள் இயக்கத்தில் நடிக்க மாட்டீங்களா என்றும் கேட்டு எழுதியிருந்தீர்கள்.

அடுத்து வெளிவரும் படம், "லவ் டுடே" மீண்டும் நான் எங்க அப்பா இயக்கத்தில், "ஒன்ஸ்மோர்" என்கிற படத்தில் நடிக்கிறேன். உங்களைப் போன்ற ரசிகர்களின் ஆவல் இப்போது பூர்த்தியாகும் என்று நான் நினைக்கிறேன். உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றென்றும் உங்கள் அன்பு,

விஜய்.

சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் மார்ச் 1, 1997 ஆம் ஆண்டு வெளியான கடிதம்.

The response given by the current Chief Minister Vijay to the question of whether he would act again under the direction of S. A. Chandrashekhar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.