இளைய தலைமுறை நடிகர்களிலிருந்து இளைய தளபதி விஜய்யை தனித்துக்காட்டும் அம்சங்களில் முக்கியமானது அவரது நற்பணிப் பண்பு. அது சமீபகாலமாக விஜய்யின் அழுத்தமான அடையாளங்களில் ஒன்றாகவே சமூகத்தால் பார்க்கப்படுவதின் அடையாளம்தான் மிகக் குறைந்த வயதில் அவருக்குக் கிடைத்திருக்கும் சமூக சேவைக்கான டாக்டர் பட்டம்.
மிகக் குறுகிய காலத்தில் குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக விஜய் மாறியதற்கு அவரது நற்பண்புகளோடு நற்பணிச் செயல்களும் முக்கியப் பங்கு வகித்தன என்றால் அதில் மிகையில்லை. வீடு, மனைவி, மக்கள் என்று குறுகிய வட்டத்திற்குள் தங்கள் வாழ்க்கையை நிர்மாணித்துக்கொண்டு ரசிகர்களைப் பார்த்தாலே ஓடி ஒளியும் நடிகர்களுக்கு மத்தியில், தன் ரசிகர்களை அவர்களின் ஊர்களுக்கே சென்று சந்தித்தார் விஜய்.
அதேபோன்று தனக்கு அடித்தளமாக இருக்கும் ரசிகர்களை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் அவர் நடந்துகொண்டதும்கூட அவரை தனித்துவமிக்க கலைஞராக தமிழ்த் திரையுலகில் அடையாளம் காட்டின. விஜய்யின் நற்பணிச் செயல்கள் மற்றும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையேயான உறவு குறித்து இந்த வாரக்கட்டுரை அலசுகிறது.
நற்பணி நாயகன்
ஒரு நடிகன் என்ற வட்டத்திற்குள் மட்டுமே தன்னை அடைத்துக் கொள்ள விரும்பாமல் ஒரு துடிப்பான தமிழ் இளைஞன் என்ற முறையில் தமிழ்ச் சமூகத்தோடும் தன்னைப் பிணைத்துக் கொள்ள வேண்டும் என்ற விஜய்யின் விருப்பம்தான் அவரது நற்பணிகளாக வெளிப்படத் தொடங்கின.
விஜய்யின் இந்த 15 வருட திரையுலக வாழ்க்கையில் அவர் இதுவரை செய்த மொத்த நற்பணிகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. பெருவெள்ளத்தில் சிறு துளிகளை மட்டும் இங்கே முன்வைக்கிறோம். விஜய் இதுவரை கல்விச்செலவை ஏற்றுக்கொண்டிருக்கும் ஏழைக் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 160.
சசிகலா என்ற பானை விற்கும் ஏழைத் தொழிலாளியின் மகள் முதல் மணிகண்டன் என்ற பூ விற்கும் பெண்ணின் மகன் வரை பலரும் இந்தப் பட் டியலில் அடக்கம். இதில் சசிகலா பொறியியல் முடித்து விட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிய மணிகண்டன் தற்போது பொறியியல் படித்து வருகிறார்.
இது இல்லாமல் ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் நோட்டுப் புத்தகங்கள் விஜய் தரப்பிலிருந்து ஏழைக் குழந்தைகளைச் சென்றடைகின்றன. கடந்த 10 வருடங்களாக பல்வேறு சீர்வரிசைகளுடன், விஜய் திருமணம் செய்துவைத்த ஏழை ஜோடிகளின் எண்ணிக்கை மட்டுமே இதுவரை ஐந்நூறைத் தொட்டிருக்கிறது.
ஒரு மழைக்காலத்தில் மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே ரிக்ஷா ஓட்டிய ரிக்ஷாக்காரர் ஒருவரைப் பார்த்து வேதனை அடைந்த விஜய், 500 ரிக்ஷாக் காரர்களை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஒன்று திரட்டி அவர்களுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறி மழை கோட்டுகளையும் வழங்கி மகிழ்ந்தார்.
சென்னையின் குப்பத்துப் பகுதிகளில் குடிசைகள் எரிந்து குடிசைவாசிகள் குமுறும்போதெல்லாம் நேரில் சென்று நிவாரண உதவிகளை வாரி வழங்குவதில் விஜய் எப்போதும் முதல் ஆளாக நிற்பார். கார்கில் போர், குஜராத் பூகம்பம் போன்ற இக்கட்டான காலக்கட்டங்களில் தந்தையுடன் சேர்ந்து கடைக் கடையாக ஏறி இறங்கி உண்டியல் குலுக்கி நிவாரண நிதி வசூலிக்கவும். அதில் தனது பணத்தையும் சேர்த்து பெருந்தொகை அளிக்கவும் விஜய் மறந்ததில்லை.
இவை மட்டுமில்லாமல், ஆயிரக்கணக்கான விதவைகள், வயோதிகர்கள், ஊனமுற்றோர், கல் உடைக்கும் தொழிலாளிகள் என்று சமூகத்தின் கடைநிலையைச் சேர்ந்த மக்களைத் தேடித்தேடிச் சென்று உதவிகளை வழங்கி வருகிறார் விஜய்.
[2008 டிச. 16 ஆம் தேதியிட்ட சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலின் பக்கத்திலிருந்து...]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய், நல்ல நடிகர் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு நல்ல தலைவன், நல்ல மனிதனும்கூட!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!

அரசியலுக்கு வருவது எப்போது? 2013-ல் நடிகர் விஜய்யின் பதில்!

மழையால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய நடிகர் விஜய்!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
