தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜேசன் சஞ்சயின் சிக்மா ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிக்மா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

sigma

சிக்மா போஸ்டர் - படம்: எக்ஸ்

Published On :27 அக்டோபர் 2026, 11:21 am IST

ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படம் கடந்த அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தமன் இசையில் ஆக்‌ஷன் படமாக உருவான சிக்மா படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன், யோக் ஜபே, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பொருளாதார சிக்கலில் இருக்கும் நாயகன், தன் சமயோசித புத்திசாலித்தனத்தால், சூதாட்ட கும்பலின் ரகசியப் பணத்தைக் கொள்ளையடித்து வில்லனை வீழ்த்துவதே படத்தின் கதை.

சிக்மா திரைப்படம் உலகளவில் ரூ. 13 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சிக்மா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for Jason Sanjay's film 'Sigma' has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.