பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அண்ணன் இளையராஜாவைப் பற்றி தவறாக பேசாதீர்கள்: கங்கை அமரன்

இளையராஜா குறித்து கங்கை அமரன்...

News image

இளையராஜா, கங்கை அமரன்

Updated On :26 மே 2026, 4:06 pm IST

இசையமைப்பாளர் இளையராஜா குறித்து கங்கை அமரன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 49 ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருப்பவர் கங்கை அமரன். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என அழுத்தமான பங்களிப்பைச் செய்தவர். லெனின் பாண்டியன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற உயிரிணையே ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில் பேசிய கங்கை அமரன், “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இசைத்துறையை ஏஐ கெடுத்துக்கொண்டிருக்கிறது. அதனை நம்பி வேலை செய்தால் ஒருகட்டத்தில் நம் மூளை வேலை செய்யாது. பின்னணி இசையைக் கொடுத்தால் ஏஐ-யே பாடலை எழுதிவிடுகிறது. அதற்கு நம்முடைய பெயரை எப்படி போடுவது?

வருங்கால சந்ததியினர் சிந்திக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும். என் அண்ணன் இளையராஜா குறித்து சில நேரங்கள் தவறான செய்திகள், விடியோக்கள் பரப்பப்படுகின்றன. அவர் குடும்பத்தினருடன் இல்லை என தவறாகச் சொல்கிறார்கள். அண்ணனுடன் மூத்த மகன் கார்த்திக் ராஜா இருக்கிறார். இளைய மகன் யுவன் துபையில் உள்ளார். அண்ணன் இளையராஜா சிம்பொனி, சினிமா என தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி தவறான கருத்துகளைப் பரப்பாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

Gangai Amaran has spoken about music composer Ilaiyaraaja.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.