பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மாதுரி தீக்‌ஷித்தைக் கட்டாயப்படுத்தி முத்தமிட்ட வினோத் கன்னா?

மாதுரி - வினோத் கன்னா திரைப்படம் குறித்து...

News image

மாதுரி தீக்‌ஷித், வினோத் கன்னா

Updated On :19 மே 2026, 11:42 am IST

பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஏதாவது விஷயங்கள் விவாதங்களை ஏற்படுத்தினாலும் சில செய்திகள், தகவல்கள் சர்ச்சையையும் ஏற்படுத்திவிடுகின்றன. அப்படி, எக்ஸ் தளத்தில் கடந்த சில மாதங்களாக யாருக்கும் தெரியாத பாலிவுட், கோலிவுட், டோலிவுட் ரகசியங்கள் என்ன? என்கிற கேள்விக்குப் பலரும் தங்களுக்குத் தெரிந்த தகவல்களையோ, வதந்திகளையோ பதிவிட்டு வருகின்றனர்.

பெரும்பாலும் நடிகர்களின் அந்தரங்கங்களே இதில் இடம்பெறுவதால் இயல்பாகவே சர்ச்சைகள் ஆகிவிடுகின்றன. அந்த வகையில், அண்மையில் சர்ச்சையான பதிவு, “நடிகர் வினோத் கன்னா தன்னைவிட 20 வயது குறைவான நடிகை மாதுரி தீக்‌ஷித்தை வேண்டுமென்றே முத்தக்காட்சியில் நடிக்க வைத்தார். அந்தக் காட்சி கிடைத்தால், தன் சம்பளத்தைக் குறைத்துக்கொள்வதாக வினோத் கூறியதால் தயாரிப்பாளரும் மாதுரியை முத்தக்காட்சிக்கு ஒப்புக்கொள்ள வைத்திருக்கின்றார். ஆனால், சாதாரண முத்தக்காட்சியாக இல்லாமல் கட் சொல்லியும் நிறுத்தாத வினோத் கன்னா, மாதுரியின் உதட்டைக் கடித்துவிட்டார். காட்சி முடிந்ததும் மாதுரிக்கு ரத்தம் வந்தது.” எனக் கூறப்பட்டிருந்தது.

இப்பதிவைப் பலரும் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர். அதிகாரம் கொண்ட ஆண்களால் எதையும் செய்ய முடிகிறது என்றும் திரைத்துறையைப் போல் பெண்கள் சுரண்டப்படும் இடம் வேறில்லை என்றும் வினோத் கன்னாவைத் தாக்கி வருகின்றனர்.

அதே நேரம், மாதுரி ஏன் ஒப்புக்கொண்டார்? 1.35 வினாடிகள் கொண்ட முத்தக்காட்சியைப் காட்சியைப் பார்த்தால் மாதுரியும் தன்னை இழந்தவராகவே தெரிகிறது. ஆண்கள் என்றால் மட்டும் சுலபமாக அடித்துவிடுகிறார்கள். பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை மறுத்து, ஆண் வெறுப்பு கருத்துகளைப் பரப்புகிறார்கள் என்கிற வாதங்களும் எழுந்துள்ளன.

இந்த முத்தக்காட்சி இடம்பெற்ற திரைப்படம் தயவான் (1988). இது மும்பையில் தாதாவாக இருந்த தமிழர் வரதராஜ முதலியாரின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி எடுக்கப்பட்ட நாயகன் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Allegations have been leveled against popular Bollywood actor Vinod Khanna.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.