துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீடு குறித்து கௌதம் மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில், “என்னையும் என் சினிமா வாழ்க்கையையும் அழிக்க சிலர் முயன்றனர்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம் உருவாகி, நிதி பிரச்னையின் காரணமாக 8 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்னும் திரையரங்கில் வெளியாகாமல் இருக்கிறது.
துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீடு தொடர்பாக தொடரப்பட்ட நிதி தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப். 30 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ’துருவ நட்சத்திரம்' படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்துள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து கௌதம் மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சிலர் என் சினிமா வாழ்க்கையை அழிக்கவும் என் படம் வெளியாவதை தடுக்கவும் முயற்சித்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்தப் படத்தில் வேலை செய்துள்ளார்கள்.
இன்னொரு மனிதனர், என்னுடைய சீனியர் வழக்குரைஞர் அப்துல் ஹமீது எனக்காக முன்னின்று போராடினார். இதற்கடுத்து முக்கியமான மனிதர் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இருண்ட சுரங்கப் பாதையின் இறுதியில் வெளிச்சமாக எனக்குப் பாதை அமைத்துக்கொடுத்துள்ளார்.
துருவ நட்சத்திரம் படம் வெளியாக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார். நிதிப் பிரச்னையினால் வெளியாகாமல் இருக்கும் எந்த ஒரு படத்துக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு மைல்கல்லாக இருக்கும். இனிமேல் நல்லதே நடக்கும் எனக் கூறியுள்ளார்.
Summary
Some people tried to destroy me and my film career: Gautham Menon Dhruva Natchathiram release.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மே. 27-ல் துருவ நட்சத்திரம்?

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்: கௌதம் ராம் கார்த்திக்

ஐஸ்வர்யா மேனன் படத்தின் அறிமுக போஸ்டர்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

