நடிகர் அல்லு அர்ஜுனின் 25-வது திரைப்படத்தை பாசில் ஜோசஃப் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கின் முன்னணி நடிகராக நடித்து வந்த அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்தது. தொடர்ந்து வெளியான புஷ்பா - 2 ரூ. 2 ஆயிரம் கோடி வரை வசூலித்து வணிக ரீதியாகவும் அல்லு அர்ஜுனை உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, ரூ. 400 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் வளர்ந்துள்ளார்.
புஷ்பா - 2 திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் தன் 22-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான பாசில் ஜோசஃப் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தன் 25-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்னல் முரளி திரைப்படம் மூலம் இயக்குநராக இந்தியளவில் பாசில் கவனிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
reports suggests director basil joseph might direct actor allu arjun's 25th movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிரபல நடிகரைக் காதலிக்கும் பூஜா ஹெக்டே?

மும்பைக்குக் குடியேறும் அல்லு அர்ஜுன்?
அட்லி - அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் பெயர்!

அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் பெயர் அப்டேட்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

