விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி - 7 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி, நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், விரைவில் 7-வது சீசன் தொடங்கவுள்ளது.
சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கு இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 6 சீசன்களை தொகுத்து வழங்கிய ரக்ஷன், இந்த முறையும் தொகுத்து வழங்கவுள்ளார். இவருடன் இணைந்து கடந்த முறை குக்காக இருந்த ஜோயாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.
இம்முறையும் சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன், கௌசிக் சங்கர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கிறார்கள். இவர்களுடன் நடிகை ரோஜா புதிய நடுவராக இணைந்துள்ளார்.
இந்த புதிய சீசனில் பங்கேற்கவுள்ள குக்குகள் மற்றும் கோமாளிகள் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த சீசனில் கணவன் - மனைவி ஜோடியாக குக்குகள் பங்கேற்கவுள்ளனர்.
முந்தைய சீசன்களில் பங்கேற்ற கோமாளிகளும்(சமையல் தெரியதாவர்), புதிதாக சில கோமாளிகளும் இந்த சீசனில் பங்கேற்கவுள்ளனர்.
முந்தைய சீசன்களில் கோமாளிகளாக பங்கேற்ற புகழ், சுனிதா, ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் இந்த சீசனிலும் பங்கேற்கவுள்ளனர்.
குக் வித் கோமாளி - 7 சீசன் நிகழ்ச்சி ஏப்ரல் 4 முதல் இரவு 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் இரவு 9.30 மணிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The broadcast date and time for the show Cooku with Comali - 7, set to air on Vijay TV, have been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரேயா - சித்து!

கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்! குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாற்றம்!

குக் வித் கோமாளி - 7 நிகழ்ச்சியின் புதிய முயற்சி! போட்டியாளர்கள் யார் யார்?

விரைவில் குக் வித் கோமாளி - 7: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


