உத்தரப் பிரதேசத்தில், கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மணிமாலை வியாபாரி மோனலிசா போஸ்லே அழகு நட்சத்திரமாக இணையத்தில் பிரபலமானார்.
இதையடுத்து, சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்தன. தற்போது, அந்தப் பட வாய்ப்பில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
சனோஜ் மிஸ்ரா இயக்கத்தில் தி டையரி ஆஃப் மணிப்பூர் என்ற படத்தில் நேபாளம், மும்பையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டபோது அத்துமீறி உடலைத் தொட்டதாக மோனலிசா போஸ்லே கூறியுள்ளார். கொச்சியில் நடந்த செய்தியாளர் சந்திபில் மோனலிசா போஸ்லே கூறியிருப்பதாவது:
இவரது படங்களில் யார் நடிப்பார்கள்? அவர் மிகவும் தவறான மோசமான மனிதர். திரைப்படம் என்ற பெயரில் அவர் சிறுமிகளிடம் தவறாக நடந்துகொள்கிறார். அவரது பெயரை உச்சரிக்கவே அறுவறுப்பாக இருக்கிறது.
நாங்கள் இந்து முறைப்படியே கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். நாட்டில் உள்ள அனைவருக்கும் இது தெரியும். ஆனால், இயக்குநர் எங்களது திருமணத்தை லவ் - ஜிகாத் என்கிறார். நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்.
எனக்கும் எனது கணவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. மத்திய அரசும் மாநில அரசும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
எனக்கு நடந்த அநீதிகளை எனது குடும்பத்தினரிடம் கூறினேன். ஆனால், அவர்கள் முதல் படம் என்பதால் இப்படி இருக்குமென அலட்சியமாக இருந்துவிட்டார்கள் என்றார்.
சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தனது முஸ்லிம் நண்பரை மோனலிசா போஸ்லே திருமணம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Summary
Kumbh Mela fame Monalisa Bhosle accuses director of ‘misbehaving’ with minor girls.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
20 மொழிகள்... 11 ஆயிரம் பாடல்கள்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!
கும்பமேளா புகழ் மோனலிசா கணவர் மீது போக்ஸோ வழக்கு!

கேரளத்தில் காதலனை மணந்த கும்பமேளா நாயகி மோனலிசா! பாதுகாப்பு கேட்கிறார்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

