தெலங்கானாவில் வழங்கப்படும் கத்தார் திரைப்பட விருது விழாவில் நடிகர் கமல் ஹாசன் பைதி ஜெயராஜ் விருது பெற்றார். இந்த விருதினை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர் நாகார்ஜூனா இணைந்து கமலுக்கு வழங்கினார்கள்.
பைதி ஜெயராஜ் விருது என்பது நடிகர் மட்டுமல்லாத ஒரு திரைத்துறையினருக்கு அவரது சேவையைப் பாராட்டி வழங்கப்படுகிறது.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு பரிணாமங்களில் இருக்கும் கமலுக்கு இந்த விருது அளித்ததில் தவறே இல்லை எனும் அளவுக்கு பொறுத்தமானவராகக் கருதப்படுகிறார்.
இதற்கு முன்பாக, மணிரத்னம் இந்த விருதினை வென்றிருந்தார். கமல் - மணிரத்னம் இருவரும் நாயகன் படத்துக்குப் பிறகு தக் லைஃப் படத்தில் இணைந்தார்கள். இந்தப் படம் சுமாரான வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் பிஎன் ரெட்டி விருதினையும் சிரஞ்சீவி என்டிஆர் தேசிய விருதினையும் தயாரிப்பாளர் அஸ்வினி டட் நாகிரெட்டி - சக்ரபாணி விருதினையும் வென்றார்கள்.
இந்த விருதினைப் பெற்ற கமல் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விருது அளித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கத்தார் திரைப்பட விழாவை புதுப்பித்த துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமர்காவுக்கும் நன்றி தெரிவித்து, ”சினிமா வாழ்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கமலின் நன்றி பதிவு. - படம்: எக்ஸ் / கமல் ஹாசன்.
Summary
The awards ceremony for the Telangana Gaddar Film Awards, was held on the occasion of Ugadi, where Kamal Haasan received the Paidi Jairaj Film Award.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழகத்திற்கு அவமானம்! கமல் ஹாசன்

விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!

பேரவைத் தேர்தல்: மநீம தலைவர் கமல் வாக்களித்தார்!

ஜன நாயகன் கசிந்தது விபத்தல்ல; நிர்வாகத்தின் தோல்வி: கமல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


