சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு தொடரில் நடிகை சஹானா இணைந்துள்ளார்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் ஸ்வாதி கொண்டே நாயகியாகவும், நியாஸ் கான் நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.
மேலும் இந்தத் தொடரில் பாரதிராஜாவின் தம்பி தேனி முருகன், ப்ரீத்தி சஞ்சீவ், பிரபாகரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தத் தொடரை, தென்னவன் படத்தை இயக்கிய நந்தன் சி முத்தையா இயக்கி வருகிறார்.
கிராமத்தில் தந்தையுடன் வளர்ந்த பெண், கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த நாயகனை திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அதன்பிறகு, அந்தக் குடும்பத்தில் நாயகி தனது கணவருடன் சேர்ந்து சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், மூன்று முடிச்சு தொடரில் நடிகை சஹானா நடித்து வருகிறார்.
யார் இந்த சஹானா?
நிகழ்ச்சி தொகுப்பாளராக சின்ன திரையில் அறிமுகமான சஹானா, பகல் நிலவு தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், அழகு, உயிரே, கண்ணான கண்ணே, தாலாட்டு உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தார்.
தற்போது, மூன்று முடிச்சு தொடரில் இணைந்துள்ளார்.
Summary
Actress Sahana has joined the serial Moondru Mudichu, which is being aired on Sun TV.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறகடிக்க ஆசை தொடரில் இணைந்த பிரபல திரைப்பட நடிகர்!

கயல் தொடரில் மறைந்த சுபாஷினிக்குப் பதில் ரோஜா சீரியல் நடிகை!

சிங்கப் பெண்ணே தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

சின்ன திரையின் டாப் 5 சீரியல்கள்! முதலிடத்தில் மூன்று முடிச்சு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


