நடிகர் சனந்த் நாயகனாக நடிக்கும் “ஹார்ட்டின்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஜில் ஜங் ஜக், பேட்டை, மகான் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்படுபவர் நடிகர் சனந்த். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான மெர்குரி படத்தில் சனந்த் நாயகனாக நடித்திருந்தார்.
அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் நாயகனாக நடித்துள்ள புதிய படம் “ஹார்ட்டின்”. நடிகைகள் மடோனா செபாஸ்டியன், இமையா ஆகியோர் இப்படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்த நிலையில், முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள “ஹார்ட்டின்” படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று (ஜூன் 19) வெளியிட்டுள்ளனர்.
ஏற்கெனவே, கடந்த சில நாள்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
டிரிடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹார்ட்டின் படம் வரும் ஜூன் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The trailer for the film "Heartin," starring actor Sananth as the lead, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹார்ட்டின் பட டிரைலர்!

பிருத்விராஜின் நோபடி டிரைலர்!

எங்கள் தங்கம்: சமந்தா படத்தின் டிரைலர் வெளியீடு!

ஹார்ட்டின் படத்தின் பாடல் வெளியீடு!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

