ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
1திரிஷ்யம் - 3

நடிகர் மோகன் லால் நாயகனாக நடித்து வெளியான திரிஷ்யம் - 3 திரைப்படம் இன்று(ஜூன் 18) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
முந்தைய பாகங்களில் நடித்த மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் ஆகியோர் மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.
2அதிரடி

அதிரடி பட போஸ்டர்
படம்: எக்ஸ்
மலையாள சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட திரைக்கலைஞரான பாசில் ஜோசஃப் தன் தயாரிப்பு நிறுவனத்தில் அதிரடி படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தினை அருண் அனிருதன் எழுதி இயக்க, நடிகர்கள் பாசில் ஜோசஃப், டொவினோ தாமஸ், ரியா ஷிபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை(ஜூன் 19) சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.
3கெணத்த காணோம்

நடிகர் யோகி பாபுவின் கெணத்த காணோம் திரைப்படம், ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
இந்தப் படத்தில் யோகி பாபு, கோயில் பூசாரியாக நடித்துள்ளார். மேலும் லவ்லின் சந்திரசேகர், ரைச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், கவிதா பாரதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
4ஐ வில் ஃபைண்ட் யூ (I WILL FIND U)

மகனைக் கண்டறியும் தந்தையின் கதையாக, திரில்லர் பாணியில் ஐ வில் ஃபைண்ட் யூ இணையத் தொடர் எடுக்கப்பட்டுளது.
இந்தத் தொடரை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணலாம்.
5 ஹஸ்பண்ட்ஸ் இன் ஆக்ஷன் (Husbands In Action)

அதிரடி கலந்து நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள தென்கொரிய திரைப்படம் ஹஸ்பண்ட்ஸ் இன் ஆக்ஷன்.
இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கொரியன், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நாளை வெளியாகிறது.
6கடந்த வார ஓடிடி (கருப்பு)

கருப்பு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
இந்தப் படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி ’பேபி கண்ணன்’ என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
7ட்ரிடம்

ஷேன் நிகமின் ட்ரிடம் படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.
ஜீத்து ஜோசப்பின் உதவி இயக்குநர் மார்டின் ஜோசப் இயக்கியுள்ள ட்ரிடம் படத்தில் காவல் துறை அதிகாரியாக ஷேன் நிகம் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில், சானியா ஃபாதிமா, சோபி திலகன், கிருஷ்ண பிரபா, கோட்டயம் ரமேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
8பூத் பங்களா

பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய் குமார், தபு, பரேஷ் ராவல், வாமிகா கபி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பூத் பங்களா.
இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
9ரமணி கல்யாணம்

விஜய் ஆதிரெட்டி இயக்கத்தில் சூர்யா வசிஷ்டா , தீப்ஷிகா சந்திரன், சீனிவாச ரெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ரமணி கல்யாணம்.
இந்தத் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
Summary
Let's take a look at which movies are releasing on OTT platforms this week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK
தினமணி செய்திச் சேவை


