ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடர் வெளியீடு எப்போது? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரின் வெளியீடு குறித்து தெரியவந்துள்ள தகவல்.

News image

ஹார்ட் பீட் தொடர் - படம்: எக்ஸ்

Updated On :1 மணி நேரம் முன்பு

ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த தொடரான ஹார்ட் பீட் மூன்றாம் பாகத்தின் வெளீயீடு குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3வது சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான அறிவிப்பு விடியோ வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

முந்தைய சீசன்களில் நடித்த நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.

தீபா பாலு கோமா நிலைக்கு சென்றதுடன், ஹார்ட் பீட் - 2வது சீசன் நிறைவடைந்தது. இதற்குப் பிறகான கதை எப்படி இருக்கும் என்று, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரின் வெளியீடு எப்போது என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், ஹார்ட் பீட் இணையத் தொடரின் மூன்றாம் பாகம் வரும் ஜூன் 25 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Summary

Information regarding the release of the third season of Heart Beat—a series that has become immensely popular among fans—has come to light.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.