இயக்குநர் பாரதிராஜா ஏராளமான நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தி, அவர்கள் திரையுலகில் கோலோச்சினாலும், தன்னுடைய மகனை பெரிய கதாநாயகனாக்கிப் பார்க்கும் ஆசை மட்டும் நிறைவேறவில்லை.
பல கிராமத்துப் படங்களின் மூலம் நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவுக்கு தன்னுடைய மகனையும் கதாநாயகனாக்கிப் பார்க்கும் ஆசை இருந்தது. மகன் மனோஜ் இளைஞரானதும், அவருக்கேற்ற ஒரு திரைப்படத்தை உருவாக்கும் பணியில் இறங்கினார். 1999ஆம் ஆண்டு தாஜ்மஹால் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.
ஆனால், ஏனோ, அவர் தன்னுடைய பாணியில் அந்தப் படத்தை இயக்காமல், மகன் மனோஜ் என்ற கதாநாயகனை மனதில் வைத்தே பல தெரிவுகளை மேற்கொண்டிருந்தார், அதுவே, அந்தப் படத்தில் பாரதிராஜாவின் வாசம் இல்லாமல் போனதுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
இரண்டு பகைக் கிராமங்கள், எப்போதும் ஓயாத சண்டை, ஒரு கிராமத்தில், கதாநாயகன், மற்றொரு கிராமத்தில் கதாநாயகி. இவர்களுக்குள் காதல், ஆனால், காதலுக்கு குடும்பம் மட்டுமல்ல, கிராமப் பகையும் எதிராக நிற்கிறது. கதாநாயகியின் அண்ணன் வேறொரு மாப்பிள்ளைப் பார்க்க திருமணம் நடக்கிறதா என்பதில் படம் முடியும்.
இந்தப் படத்தில் பாரதிராஜா தன்னுடைய வழக்கமான மண் வாசனையைக் கொண்டு வராமல், கிராமம், கிராமத்து மக்களின் உடை அலங்காரம் என பலவற்றையும் மாற்றியிருந்தார். ரியா சென் என்ற புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியிருந்தாலும், கிராமத்து பாணிக்கு அவர் சற்று ஒட்டாமல் இருந்ததாகவே பார்க்கப்பட்டது.
படத்தில் திருப்பாச்சி அருவாள என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. பாரதிராஜாவின் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டாலும், படம் எதிர்பார்த்தது போல ஓடவில்லை.
பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகள் வெற்றி பெற்றாலும் சுதாகர் போல, இவரால் அறிமுகப்படுத்தப்படும் நடிகர்கள் பெரிய அளவில் பேசப்படுவதில்லை என்ற ராசி சென்டிமெண்ட், பாரதிராஜாவின் மகனுக்கும் பொருந்தியதாகவே கூறப்பட்டது.
பலரை தன்னுடைய இயக்கத்தால் பெரிய நடிகர், நடிகைகள் ஆக்கிய பாரதிராஜாவால், தன்னுடைய மகனை பெரிய நடிகர் ஆக்க முடியவில்லை என்ற வருத்தம் அவரை வாட்டியது. அது மட்டுமல்ல, இயக்குநரின் மகன், இமயத்தின் மகன் என்ற பெரிய எதிர்பார்ப்புகளே, மனோஜுக்கு பின்னடைவாக இருந்ததாகவும் கூறுவார்கள். எனினும் அவர் உதவி இயக்குநராகவும் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகராகவும் நடித்திருந்தார்.
தன்னுடைய மகன் திரைத்துறையில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்ற வருத்தத்துடன் கூடுதல் சுமையாக, கடந்த ஆண்டு மனோஜ் திடீரென மாரடைப்பால் காலமானார். மகன் இறப்பு, பாரதிராஜாவை பெரிய அளவில் பாதித்தது. ஏற்கனவே வயது முதுமை காரணமாக உடல்நலக் குறைவுடன் மிகப்பெரிய மனக்குறையும் துயரும் சேர்ந்து அவரை வாட்டியது.
வயோதிகம் தொடர்பான உடல் நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா இன்று தன்னுடைய 84வது வயதில் காலமானார். அவருக்கு திரையுலகினர் பலரும் தங்களது இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
பலரை திரையுலகின் மிகப்பெரிய நடிகராக பட்டித் தொட்டி எங்கும் பேச வைத்த இயக்குநர் இமயம், தன்னுடைய மகனை பெரிய நடிகராக்கும் ஆசை நிறைவேறாமலேயே உலகை விட்டுப் பிரிந்தார்.
Summary
About the one wish Bharathiraja had regarding his son Manoj that remained unfulfilled...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலம் கடந்து நிற்கும் காதல் இலக்கணம்! பாரதிராஜாவின் முதல் மரியாதை!

கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
எனக்கும் அவருக்குமான உறவு... பாரதிராஜா உடலுக்கு இளையராஜா அஞ்சலி!

பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


