நடிகை ஷ்ரத்தா கபூர் நாட்டுப்புறக் கலைஞராக நடித்துள்ள ‘ஈதா’ (Eetha) என்ற திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேடாக் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை லஷ்மண் உடேகர் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் ஷ்ரத்தா கபூர் (39 வயது) 2010ல் தனது முதல் படத்தில் அறிமுகமானார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஸ்ட்ரீ 2 மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது, ஈதா படத்தில் மகாராஷ்டிரத்தில் மிகவும் புகழ்பெற்ற லாவணி நடனக் கலைஞர் விதாபாய் நாராயண்காவ்ங்கர் கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ரந்தீப் ஹூடா, முகமது ஜீஷன் ஆயுப் நடித்துள்ளார்கள். ஸ்ட்ரீ படத்தைத் தயாரித்த தினேஷ் விஜயன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
விதாபாய் நாராயண்காவ்ங்கர் மகாராஷ்டிராவின் நாட்டுப்புறப் பாரம்பரியத்தில், லாவணி மற்றும் தமாஷா பாணியிலான கலைகளின் மூலமாக மக்களிடையே கவனம்பெற்றவர். நாட்டுப்புறக் கலையில் சிறப்பாக பங்காற்றியதற்காக 1957, 1990ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரிடம் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடிகை ஷ்ரத்தா கபூர் தேசிய விருது வெல்லாத ஷ்ரத்தா கபூர் இந்தப் படத்துக்கு முதல்முறையாக வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Shraddha Kapoor's 'Eetha' to release on August 28
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆபாசம், அருவருப்பு... பெத்தி படக்குழுவை விமர்சிக்கும் ஜான்வி கபூர் ரசிகர்கள்!

ஜான்வி கபூர் மீது விழுந்த ராம் சரண் ரசிகர்!
ஹார்ட்டின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

தமிழ்ப் படங்களில் நடிக்க அதிக ஆசை: ஜான்வி கபூர்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


