பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

உத்வேகம் அளித்த ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம்: ப்ரீத்தி முகுந்தன்

ஏஜெண்ட் டீனா குறித்து ப்ரீத்தி முகுந்தன்...

News image

ஏஜெண்ட் டீனா (வசந்தி), ப்ரீத்தி முகுந்தன்

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் பிளாஸ்ட் படத்தில் நடிக்க உத்வேகம் அளித்ததாகக் கூறியுள்ளார்.

தெலுங்கில் நடிகையாக அறிமுகமான ப்ரீத்தி, தமிழில் நடிகர் கவினுடன் ஸ்டார் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின், பான் இந்திய படமான கண்ணப்பாவில் நடித்தாலும் ப்ரீத்திக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமலே இருந்தது.

இந்த நிலையில், அண்மையில் வெளியான பிளாஸ்ட் திரைப்படத்தில் முன்னணி நாயகியாக நடித்து, சண்டைக்காட்சிகளில் அசத்தியிருந்தார்.

எந்தக் காதல் காட்சிகளும் இல்லாமல் முழுக்க, முழுக்க தன்னுடைய சண்டைக் காட்சிகளில் சிறப்பான நடிப்பை ப்ரீத்தி முகுந்தன் கொடுத்திருந்தது ரசிகர்களை ஈர்த்துள்ளது. இதனால், பலரும் ப்ரீத்தியை, ஆக்‌ஷன் குயின் என்றும் ஆக்‌ஷன் அழகே என்றும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பிளாஸ்ட் படம் குறித்துப் பேசிய ப்ரீத்தி முகுந்தன், “இந்தப் படத்திற்காக கராத்தே கற்றுக்கொண்டு, சரியாக நடிக்க வேண்டும் என்பதற்காகக் கடினமாக உழைத்தேன். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு விக்ரம் படத்தில் தோன்றிய ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் பெரிய உத்வேகமும் அளித்தது. தொடர்ந்து, நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிப்பேன். தென்னிந்திய சினிமாவுடன் ஹிந்தி படங்களிலும் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ப்ரீத்தி நடிப்பில் அடுத்ததாக இதயம் முரளி, தாஷாமாக்கன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. பாலிவுட்டிலும் விரைவில் அறிமுகமாகிறார்!

Actress Preethi Mukundan has stated that the character 'Agent Tina' inspired her to act in the movie Blast.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.