பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரஜினி படத்திற்குப் பின் சிலம்பரசனை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து!

அஷ்வத் மாரிமுத்து - சிலம்பரசன் படம் குறித்து...

News image

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, சிலம்பரசன்

Updated On :7 ஜூன் 2026, 5:05 pm IST

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் படம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா பேசியுள்ளார்.

டிராகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நடிகர் சிலம்பரசன் படத்தை இயக்குவார் என அறிவிப்பு வெளியானது. ஆனால், திடீரென நடிகர் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து அழைப்பு வந்ததால் ரஜினி - 173 படத்திற்கான பணிகளில் அஷ்வத் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையே, நடிகர் பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் அவரது முதல் படத்தில் அஷ்வத் மாரிமுத்து காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. டிராகன் திரைப்படம் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்ட அஷ்வத், அப்படத்திலேயே சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவை ஒருபுறம் இருந்தாலும், நடிகர் சிலம்பரசனுடன் அறிவிக்கப்பட்ட படம் என்ன ஆனது? என்கிற கேள்விகள் அடிக்கடி எழுகின்றன.

இந்த நிலையில், இதுகுறித்து பேசிய ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா, “நடிகர் சிலம்பரசனின் 51-வது படமாக அஷ்வத் மாரிமுத்து படம் உருவாகும். இந்தாண்டில் துவங்கப்பட இருந்த படப்பிடிப்பை அடுத்தாண்டு பிப்ரவரிக்கு திட்டமிட்டுள்ளோம். சிலம்பரசன் அரசன் திரைப்படத்தையும், அஷ்வத் அவரின் பணிகளையும் முடித்தபின் எஸ்டிஆர் 51 ஆரம்பமாகும்” எனக் கூறியுள்ளார்.

Producer Archana has spoken about Director Ashwath Marimuthu's film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.