இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று (ஜூன் 7) மாலை 4.30 முதல் 5.30 மணி வரையில் அட்டாரி - வாகா எல்லையில் பாடல் பாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. பஞ்சாப், ஜேசிபி திடலில் ‘ஜெய் ஹோ - ஏ ட்ரிபுட் டூ பிரேவ்ஹார்ட்ஸ்’ என்ற தலைப்பில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் மெய்ன் வாபஸ் ஆவுங்கா (Main Vaapas Aaunga) என்ற படம் உருவாகியுள்ளது. இதில் தில்ஜித் தோசஜ், நஸ்ரூதின் ஷா, ஷர்வாரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஜூன் 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 1947ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிவினை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ஜெய் ஹோ பாடல் உலகம் முழுவதும் கவனம் பெற்றது. படத்தின் புரமோஷன் அல்லாமல், ராணுவ வீரர்களை சிறப்பிக்கும்படியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் இம்தியாஸ் அலி, மோஹித் சௌஹான், பூஜா திவாரி உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் இம்தியாஸ் அலி “முதல்முறையாக ஏ.ஆர். ரஹ்மான் பஞ்சாபுக்கு வருகிறார். இதுவரை எந்த இசைக் கலைஞர்களும் அட்டாரி - வாகா எல்லையில் பாடல் பாடியதில்லை. கொடி நிகழ்வின்போது ஏ.ஆர். ரஹ்மான் பாடல் பாடுவார். இந்தப் படத்துக்கும் இந்த இடத்துக்கும் மிக முக்கியமான தொடர்பு இருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் பாடுவது மிகவும் அற்புதமான காட்சியாக இருக்கும் என்றார்.
Summary
AR Rahman to perform at Attari Border to honour BSF bravehearts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல்லையில்லா இசை!

ராணுவ வீரர்களுக்காக... அட்டாரி - வாகா எல்லையில் பாடிய ஏ.ஆர். ரஹ்மான்!

எபோலா தொற்று: உகாண்டா- காங்கோ எல்லை மூடியதால் வர்த்தகர்கள் அவதி!

என் தாயாரின் நினைவிடம்தான் எனக்குப் பிடித்த இடம்: ஏ. ஆர். ரஹ்மான்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

