லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையான நடிகர் கவின்!

இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார் நடிகர் கவின்...

நடிகர் கவின் அவரது மனைவி மோனிகா

Published On :30 ஜூலை 2026, 2:52 pm IST

நடிகர் கவின் இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் கவின், தனக்கென நல்ல வணிகத்தையும் வைத்திருப்பதால் இவர் நடிக்கும் திரைப்படங்களின் ஓடிடி உரிமம் சிறப்பான தொகைக்கே விற்கப்படுவதால் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

இறுதியாக, நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்தை வெற்றியைப் பெறவில்லை. மேலும், விக்ரணன் அசோக் இயக்கிய மாஸ்க் படம் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தது.

தற்போது, நடிகை நயன் தாராவுடன் ஹாய் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக, நம்ம வீட்டு பிள்ளை என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் கவின் தன் மனைவிக்கு ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.