ஜன நாயகனில் தனது காட்சிகள் நீக்கப்பட்டதால் அழுத ஆனந்தி..! வைரலாகும் விடியோ!
ஜன நாயகன் படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டதால் நடிகை அழுதது குறித்து...

நடிகை ஆனந்தி, ஜன நாயகன் போஸ்டர். - படங்கள்: இன்ஸ்டா / ஆனந்தி, கேவிஎன் புரடக்ஷன்ஸ்.
ஜன நாயகன் திரைப்படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டதால் நடிகை ஆனந்தி அழுது விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் மிகவும் அதிர்ஷ்டமில்லாதவள் எனக் கூறியுள்ளார்.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படம் நேற்று (ஜூலை 23) உலகெங்கும் வெளியானது. இந்தப் படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் தாமதமாக வெளியானது.
ஜன நாயகன் படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நிழகல் ரவி, ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி இருந்தாலும் முதல் நாளில் தமிழகத்தில் பல திரையரங்குகளில் காட்சிகள் ஹவுஸ் ஃபுல் ஆனதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ஆனந்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நான் அதிகமான படங்களில் நடிக்கிறேன். ஆனால், அது எடிட்டில் போய்விடுகிறது. அதற்காக நான் வருத்தப்படுவதில்லை. ஆனால், ஜன நாயகன் படத்தில் எடிட்டானது வருத்தமாக இருக்கிறது. ஏனெனில், நான் சிறிய இடைவெளிக்குப் பிறகு முதலில் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தேன்.
இதன் வெளியீட்டிற்காக நான் ஓராண்டாகவே காத்திருந்தேன். அதிலும் விஜய் சாருடன் நடித்திருந்தேன். நான் திரைத்துறையில் நடிக்க விரும்பியதே அவருடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவும் அவருடன் நடிப்பது கனவாகவே இருந்தது. அவர் இனிமேலும் நடிப்பதாக இருந்தால் அவருடன் நடிக்கலாம். ஆனால், இதுதான் அவரது கடைசி திரைப்படம்.
படம் நன்றாக வந்திருக்கிறது. அதிலும் பெண்கள் முன்னேற்றதிற்காக எடுத்திருக்கிறார்கள். படம் பார்க்க ஆவலுடன் சென்றிருந்தேன். நமது காட்சிகள் வருமென சென்றிருந்தேன். ஆனால், எடிடில் போகுமென நினைக்கவில்லை. அதிர்ஷ்டமில்லாதவளாக உணர்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இந்த விடியோவில் பலரும் ஆறுதலாக கமெண்ட் செய்து வருகிறார்கள். முன்னதாக கருப்பு திரைப்படத்திலும் இவரது காட்சிகள் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Feeling unlucky... Anandhi breaks down after her scenes from Jana Nayagan gets cut
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







