பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)

அல்லே.. அல்லேலே! சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 பட முதல் பாடல்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பட முதல் பாடல்...

jailer 2 first song

ஜெயிலர் 2 முதல் பாடல்...

Published On :21 ஆகஸ்ட் 2026, 6:57 pm IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “ஜெயிலர் 2” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் “ஜெயிலர்”. ஓய்வுபெற்ற சிறைக்காவல் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருந்த இப்படம் 500 கோடிக்கும் அதிகமான வசூல் செய்து வெற்றியடைந்தது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் இணைந்துள்ள இக்கூட்டணியில் “ஜெயிலர் 2” படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருகின்றனர்.

இத்துடன், தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்து வரும் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இசையில் இப்படம் உருவாகி வருவது பெரும் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடலான ‘அல்ல போலலோ’ இன்று (ஆக. 21) படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலில், நடிகை பூர்ணா மற்றும் மலையாள நடிகர் ராஜேஷ் மாதவன் ஆகியோர் சிறப்பு நடனம் ஆடியுள்ளனர்.

ஏற்கெனவே, ஜெயிலர் முதல் பாகத்தைப் போலவே 2 ஆம் பாகத்திலும் இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களின் சிறப்புத் தோற்றங்கள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

The first song from the movie "Jailer 2," starring Superstar Rajinikanth, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.