பெல்ஜியமில் நடைபெற்ற சவாலான 24 மணிநேர கார் பந்தயத் தொடரில் அஜித் குமார் ரேஸிங் அணி 2-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
அஜித் குமார் ரேஸிங் மற்றும் ரெட் ஆண்ட் ரேஸிங் இணைந்து பெல்ஜியத்தின் மிச்செலின் ஸ்பா-ஃபிராங்கர்சாம்ப்ஸ் என்ற உலகின் சவாலான ரேஸிங் தளத்தில் நடைபெற்ற கார் பந்தயத் தொடரில் பங்கேற்றனர். இதில் அதிநவீன மெர்சிடஸ் - ஏஎம்ஜி ஜிடி3 ரக காரை அஜித் குமார் ஓட்டினார்.
இந்தத் தொடரில் அஜித் குமார் அணி 2-ம் இடம்பிடித்து அசத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திய தேசியக்கொடியை ஏந்தி வந்த அஜித் குமார், வெற்றிக் கோப்பையை தனது அணியினருடன் ஏந்திக் காண்பித்து வெற்றியைக் கொண்டாடினார்.
இதுபற்றி, அஜித் குமார் ரேஸிங் அணியின் எக்ஸ் தளப் பக்கத்தில், “கோடிக்கணக்கான கனவுகளைச் சுமந்த வெற்றியை நோக்கியப் பந்தயம். 24 மணி நேரத் தொடரின் ஜிடி3 புரோ-ஆம் பிரிவில், புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பா-ஃபிராங்கர்சாம்ப்ஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஆர்வம், மனவுறுதி மற்றும் விடாமுயற்சிக்கு எல்லையே இல்லை என்பதை நிரூபித்து, ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் பெருமைப்படுத்திய தருணம்” எனப் பதிவிட்டுள்ளனர்.
வெற்றிக் கோப்பையுடன் அஜித் குமார் ரேஸிங் அணியினர்.
ப்ரோ-ஆம் எனப்படும் இந்தத் தொடரில் 2 தொழில்முறை ஓட்டுநர்கள் மற்றும் 2 பொழுதுபோக்கு கார் ஓட்டுநர்கள் என ஓர் அணியில் 4 பேர் கலந்துகொள்வர். இதில், தொழில்முறை ஓட்டுநர்கள் அவர்களுடன் இணைந்து பங்கேற்று பந்தய தூரத்தைக் கடக்க வேண்டும்.
இதற்கு முன்னர் பல பந்தயங்களில் அஜித் குமார் அணி வென்றிருந்தாலும் இந்த வெற்றி சிறப்பானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்தப் பந்தயம் நடைபெற்ற ஸ்பா பந்தயத் தளம் பெல்ஜியத்தின் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது.
மலைப்பகுதியில் உள்ள பந்தயச் சாலை என்பதால் அதன் பாதை கீழிறங்கி மேலேறும் வகையில் மிகவும் கடினமானதாக இருக்கும். இதில், காரை மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும்.
மேலும், இந்தப் பகுதியில் வானிலை அடிக்கடி மாறும். மழை, வெயில் என மாறிமாறி வருவதால் ஓட்டுநர்கள் அதற்கேற்ற மனவுறுதி மற்றும் கவனத்துடன் காரினை செலுத்தும் அதே வேளையில் மழை பெய்கையில் அதற்கேற்றவாறு டயர்களை மாற்றி ஓட்டவேண்டும்.
மிகவும் சவாலான இந்தப் பந்தயத்தில் தான் அஜித் குமார் அணி 2-ம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர். இது அவர்களின் முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படும் நிலையில் அடுத்ததாக இதேபோன்று ஜூன் மாதம் பிரான்சில் நடைபெறும் 12 மணி நேர பால் ரிச்சர்ட் பந்தயத்திலும் அஜித் குமார் அணி பங்கேற்கவுள்ளது.
Summary
Ajith Kumar's Team Impresses by Securing 2nd Place in Challenging Belgian Car Race!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகாரில் நிதிஷ்குமாரின் மகன் உள்பட 31 அமைச்சர்கள் பதவியேற்பு!
அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் அறிமுக விடியோ!

மாற்றம் தேவையா? அஜித் குமாரின் சர்ச்சையும் மேலாளரின் விளக்கமும்!

ஜனநாயகக் கடமை! சென்னை திரும்பினார் அஜித் குமார்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
