மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

டாக்ஸிக் ஆழமான உளவியல் அம்சங்கள் கொண்ட திரைப்படம்: யஷ்

டாக்ஸிக் குறித்து யஷ்...

News image

யஷ்

Updated On :15 ஏப்ரல் 2026, 4:24 pm IST

நடிகர் யஷ் டாக்ஸிக் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் யாஷ் தனது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' ( Toxic: A Fairy Tale for Grownups ) படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை கீதா மோகன்தாஸ் இயக்க, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற சினிமாகான் (cinemacon - 2026) நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் யஷ் டாக்ஸிக் குறித்து பேசினார்.

அதில், “முதன்முறையாக எங்கள் திரைத்துறையிலிருந்து இந்த படத்தை ஆங்கிலத்திலும் எடுத்துள்ளோம். இதன் கதைக் கரு பல அடுக்குகள் கொண்டது. இது சாதாரண கேங்ஸ்டர் சண்டைப் படம் அல்ல. வெளிப்படையாக பார்த்தால் இது ஒரு ஆக்சன் நிறைந்த கேங்ஸ்டர் படம் போல தோன்றும். ஆனால், இதில் ஆழமான உளவியல் அம்சங்களும், மனித வாழ்க்கையின் சுவாரஸ்யமான கோணங்களும் உள்ளன. ஒரு இருமை நிறைந்த கதாபாத்திரத்தை மிகவும் தனித்துவமான முறையில் காட்டியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.”

இயக்குநர் கீது மோகன்தாஸுடன் பணிபுரிந்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. அவர் கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு புதிய பார்வையைக் கொண்டு வந்துள்ளார். படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருப்பதோடு, பார்வையாளர்களின் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.” எனக் கூறினார்.

Summary

Toxic is a film with deep psychological dimensions: Yash

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.