தி பாரடைஸ் படத்தில், நடிகை கயாது லோஹர் நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று பிறந்த நாள் காணும் கயாது லோஹருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இயக்குநர் இந்தப் பட போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நாயகனாகவும் கயாது லோஹர் நாயகியாகவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.
அஸ்ஸாமைச் சேர்ந்த நடிகை கயாது லோஹர் (26 வயது) மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாகினார். பின்னர், தெலுங்கு, தமிழ், மராத்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
டிராகன் படத்தில் அறிமுகமான கயாது லோஹருக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதயம் முரளி, இம்மோர்டல், சிம்பு 49 உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பவழ மல்லி பாடலில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உடன் நடனமாடி அசத்தினார். நானியுடன் நடித்துள்ள தி பாரடைஸ் படம் ஆக. 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
தி பாரடைஸ் படத்தில் சுப்பு என்கிற சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் கயாது லோஹர் நடித்துள்ளார். இந்தப் படம் மிகுந்த பொருள் செலவில் உருவாகி வருகிறது.
கடைசியாக தெலுங்கில் ஃபன்கி என்ற படத்தில் நடித்திருந்தார். நகைச்சுவை பாணியில் உருவாகிய இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Summary
Subbalakshmi from the world of The Paradise, kayadu Lohar birthday special.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹீரோயின் லைன் அப்!

கயாது லோஹர் புகைப்படங்கள்
பள்ளிச்சட்டம்பி படத்துக்கு பெருகும் வரவேற்பு! 2 நாளில் வெற்றியை அறிவித்த படக்குழு!

கயாது லோஹரின் ஃபங்கி: ஓடிடி வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


