நடிகை ஸ்ரீ லீலா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் மாதவிடாய் குறித்து பேசியது கடுமையான விமர்சனங்களை அவருக்கு எதிராக கிளப்பியுள்ளது.
”பெண்கள் மாதவிடாய் சமயத்தில் அதை ஒரு காரணமாகக் காட்டி ஒரு செயலை செய்யாமல் இருக்கக் கூடாது; அது வெறுமனே ஒரு மனத் தடை” எனக் கூறியிருந்தார். இது சமூக வலைதளத்தில் அவருக்கு எதிராக மாறியுள்ளது
அமெரிக்காவில் பிறந்த ஸ்ரீலீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பினைத் துவங்கியவர், நடிப்பில் அதிக ஆர்வம் இருந்தாதால் திரைத்துறைக்கு வந்தார்.
தொடக்கத்தில் 2019ல் கன்னட படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் பிரபல நடிகையாக அறியப்படுகிறார். இவர் நடித்த பகவந்த் கேசரி, குண்டூர் காரம் ஆகிய படங்கள் வெற்றிபெற்றன. தமிழில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். அடுத்ததாக, நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
சமீபத்தில் ஸ்ரீலீலா தன் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றுள்ளார். அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
உஸ்தாத் பகத் சிங் படத்தின் வெற்றிவிழாவில் பேசும்போது நடிகையும் மருத்துவ படிப்பை முடித்தவருமான ஸ்ரீ லீலா பேசியிருப்பதாவது:
மாதவிடாய் எங்களுக்குப் பிரச்னையாக இருக்கக் கூடாது. நான் மாதவிடாயின்போது பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளேன். அந்தப் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.
ஆண்களைப் போலவே நாமும் சம உரிமை வேண்டுமென பேசுவதால், மாதவிடாயை ஒரு பிரச்னையாகப் பேசுவது சரியா? நாம் இந்த விஷயத்தில் நம்மையே இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும். இந்த மனத்தடையை நாம் ஒரு சாக்காக சொல்லக்கூடாது என்றார்.
இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள். எல்லாருக்குமே ஒரே மாதிரியான அனுபவங்கள் ஏற்படாது எனவும் பொதுமைப்படுத்துவது மிகவும் தவறானது எனவும் ஸ்ரீலீலா மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன
Summary
‘Push Through Periods?’ actress Sreeleela Faces Backlash her speech.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான் முதலமைச்சர் ஆகணும்... வைரலாகும் த்ரிஷா விடியோ!

பெண்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல! மோடி பேச்சுக்கு காங்கிரஸ் பதில்!
அப்போதெல்லாம் கண்ணீர் விட்டிருக்கிறேன்: ஸ்ரீலீலா

ஸ்ரீலீலா ஸ்டில்ஸ்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


