புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

சினிமாவைக் காப்பாற்ற ஒரே வழி... ரசிகர்களுக்கு மமிதா பைஜு வேண்டுகோள்!

ஜன நாயகன் விவகாரம்: மமிதா பைஜு வேண்டுகோள்!

News image

ஜன நாயகன் - ANI

Updated On :11 ஏப்ரல் 2026, 7:22 pm IST

ஜன நாயகன் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் உள்பட ஒட்டுமொத்த படமும் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனைக் கடுமையாகக் கண்டித்து திரைத்துறை சார் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கமல், ரஜினி, சூர்யா, ஜீவா, சிவகார்த்திகேயன் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களும் நடிகைகளும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஜன நாயகன் படக்குழுவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். அந்த வகையில், படத்தில் முக்கிய கதாபாத்திரமேற்றுள்ள நடிகை மமிதா பைஜு வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

“ஒரு திரைப்படம் மக்கள் பலரது கடின உழைப்பு, அதன் மீதான ஈர்ப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் வெளிப்பாடாக வருகிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் தங்களால் இயன்ற சிறந்த உழைப்பைத் தருகின்றனர்.

அப்படியிருக்கும்போது, சட்டவிரோதமாக ஜன நாயகன் கசிய விடப்படுவதைப் பார்க்கும்போது, இது நிஜமாகவே பெருத்த ஏமாற்றத்தையளிப்பதாக அமைந்துவிட்டது.

சில தருணங்களெல்லாம் ஒருங்கேயிருந்து அனுபவிக்க வேண்டும்; அதுவும் பெரிய திரையில். இப்படம் அதிகாரபூர்வமாக வெளியான பின், நாம் காத்திருந்து அதனை சரியான வழியில் கொண்டாடுவோம்.

தயவுசெய்து திருட்டுத்தனமான விஷயங்களுக்கு ஆதரவு அளிக்காதீர்கள். சினிமாவைக் பாதுகாத்திடவும் சினிமாவின் பின்னணியிலுள்ள ஒவ்வொருவரையும் பாதுகாத்திடவும் இதுவே ஒரே வழி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Mamitha Baiju voices for Jana Nayagan via X statement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.