தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மே மாத எண்கணித பலன்கள் – 1

எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?

News image
Updated On :2 மே 2026, 3:02 pm IST

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எடுக்கும் காரியங்களை பூரண திருப்தியுடன் செய்து முடிக்கும் திறன் உடைய ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் கவுரவ பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள்.  குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு வார இறுதியில் கூடும். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு காரியத் தடைகளை விலக்கும் சிறந்த பரிகாரமாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.