பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஜூன் மாத எண்கணித பலன்கள் – 4

எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?

News image
Updated On :1 ஜூன் 2026, 3:09 pm IST

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நடையிலும் செயலிலும் வேகம் உடைய நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் உங்கள் வாழ்க்கை தரம் உயர நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள்.

தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வழக்கத்தை விட செலவு கூடும்.

அரசியல்வாதிகள் வாக்கு கொடுக்கும் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம்  செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

பரிகாரம்: தினமும் அம்மனை வழிபாடு வர உத்தியோகத்தில் மேன்மை கிடைக்கும். மனதில் இருந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.