லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2026: கன்னி

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது..

கன்னி ராசி

Published On :4 ஜூன் 2026, 7:59 pm IST

https://www.dinamani.com/astrology/gurupeyarchi-predictions/2026/May/21/jupiter-transit-predictions-2026-libra2026 ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 26-ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2-ஆம் தேதியும் பெயர்ச்சியாகின்றது.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் நீங்கள். அதீதமான உணர்வுகள் கொண்டவர்கள். கௌரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பீர்கள். சிக்கனத்தை கடைபிடிப்பதிலும் வல்லவர்கள். உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள்.

கிரகநிலை

26.05.2026 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். லாப ஸ்தானத்திற்கு மாறும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் ராசி - தனது ஏழாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானம் - தனது ஒன்பதாம் பார்வையால் பஞசம ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

பலன்கள்

லாப ஸ்தானத்தில் வரப்போகும் குரு, உங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவார். நன்மையும் சிரமமும் கலந்த பலன் வாழ்வில் உண்டாகும். தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்துவிடுவீர்கள். தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தில் தேவையான நடைமுறை மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். புத்திரர் வேண்டாத நட்பும், பிடிவாத குணமும் கொண்டு செயல்படுவர். இதமான அணுகுமுறையால் அவர்களை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்துவீர்கள்.

ஆன்மிகம் நாட்டம் அதிகரிக்கும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவீர்கள். உடல்நலனில் அக்கறை ஏற்படும். எதிரியால் இருந்து வந்த தொல்லை குறையும். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும். கடன் தொந்தரவை ஓரளவு சரிக்கட்டுவீர்கள். தம்பதியர் ஒற்றுமை உணர்வுடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்கள் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து நடப்பர். ஆடம்பர எண்ணத்துடன் அதிக பயன் தராத பொருள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் ஏற்படும் குறுக்கீடுகளை மாற்றுத்திட்டத்தின் மூலம் முறியடிக்க முயல்வீர்கள்.

தொழில் சார்ந்த பயணத்தை அடிக்கடி மேற்கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி தரத்தை உயர்த்துவதில் குறுக்கீடுகளைச் சந்திப்பீர்கள். கணவன் - மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள்.

எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள். நிர்வாக நடைமுறைச்செலவு அதிகரிக்கும். கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது நல்லதல்ல. புதிய தொழில் முயற்சியை இப்போதைக்கு தவிர்ப்பது அவசியம். உத்தியோகஸ்தர்கள் உங்கள் துறையில் பணிபுரிபவர்கள் பணிசார்ந்த புதிய விஷயங்களை புரிந்து கொள்வதில் தயக்கம் கொள்வார். சகபணியாளர்களின் உதவி ஓரளவு கிடைக்கும்.

நிர்வாக அதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பது மிக அவசியம். திட்டமிட்டு பணியாற்றினால் மட்டுமே நிர்ணயித்த காலவரையறைக்குள் பணியிலக்கை எட்ட முடியும். பணவரவு சீராக இருக்கும். பணிச்சுமையால் வருத்தம் ஏற்பட்டாலும், உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகையில் சில கிடைக்கும். பணியிடத்தில் பணி தவிர்த்த பிறவிஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் சுமாரான உற்பத்தி, விற்பனை காண்பர். பணப்பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். படிப்புக்கான பண வசதி சீராக கிடைக்கும். வெளிவட்டார விஷயங்களில் ஈடுபாடு குறையும். வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேற்றம் காண்பர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகள் மற்றும் சமூகப்பணியில் உள்ளவர்களுக்கு ஆதரவு மனப்பாங்குடன் நடந்த சிலரே உங்களின் எதிரியாக மாறிவிடுவர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். புத்திரர், உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகளின் மறைமுக சூழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். வழக்கு விவகாரத்தில் ஓரளவே சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு பெறுவதில் தாமதம் உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.

உத்திரம் - 2, 3, 4

இந்த பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சனை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். நோய் நீங்கி ஆரோக்யம் உண்டாகும். புதிய சொத்து வாங்கும் போதும் சொத்தை விற்கும் போதும் கவனம் தேவை.

ஹஸ்தம்

இந்த பெயர்ச்சியால் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். காரியங்களில் வெற்றி பெற திட்டமிடுதலும் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்க எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.

சித்திரை - 1, 2

இந்த பெயர்ச்சியால் வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறிவீர்கள். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

பரிகாரம்

அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்னைகள் தீரும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6, 9

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன்

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி

Summary

கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2026 | Kanni Rasi Guru Peyarchi Palangal 2026 in Tamil

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.