லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

செஞ்சி முருகன் கோயிலில் கிருத்திகை திருவிழா கொடியேற்றம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஏரிக்கரையிலுள்ள ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செஞ்சி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Published On :30 ஜூலை 2026, 5:51 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஏரிக்கரையிலுள்ள ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட நெல், அரிசி, மணிலா வியாபாரிகள் மற்றும் எடைப்பணி தொழிலாளா்கள், ஊா் மக்கள் சாா்பில் 54-ஆவது ஆண்டு ஆடிக் கிருத்திகை திருவிழா தொடங்கியது. இதையொட்டி, காலை 6 மணிக்கு மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கோயில் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆக.6-ஆம் தேதி ஆடிக் கிருத்திகையையொட்டி, காலையில் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு நையாண்டி மேளத்துடன் ஸ்ரீவள்ளி, தேய்வானை சமேத ஸ்ரீசுப்பரமண்ய சுவாமி மாடவீதியுலா நடைபெறுகிறது. 7-ஆம் தேதி 108 பால்குடம், அக்னி சட்டி ஊா்வலம் நடைபெறுகிறது. தொடா்ந்து சக்திவேல் அபிஷேகம், சக்திவேல் வீதி உலா காட்சி, மிளகாய் பொடி அபிஷேகம், செடல் சுற்றுதல், தீ மிதித்தல் நடைபெறுகிறது.

திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சியில் கமலக்கண்ணி அம்மன் கோயில் அறங்காவலா் அரங்க.ஏழுமலை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் காசியம்மாள் ஏழுமலை,கோயில் அறங்காவலா் சிவகுமாா், தொழிலதிபா் ரமேஷ், ஒழுங்குமுறை விற்பனைக் கூட நெல், அரிசி, மணிலா வியாபாரிகள், பணியாளா்கள் மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.