லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஜூலை 6 முதல் காலி மதுப்புட்டிகளை சேகரிக்க மாட்டோம்: டாஸ்மாக் தொழில்சங்கம் அறிவிப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஜூலை 6-ஆம் தேதி முதல் காலி மதுப்புட்டிகளை சேகரிக்க மாட்டோம் என்று, டாஸ்மாக் அனைத்துத் தொழில்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.

டாஸ்மாக் - பிரதிப் படம்

Published On :3 ஜூலை 2026, 5:33 am IST

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஜூலை 6-ஆம் தேதி முதல் காலி மதுப்புட்டிகளை சேகரிக்க மாட்டோம் என்று, டாஸ்மாக் அனைத்துத் தொழில்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.

டாஸ்மாக் அனைத்து தொழில்சங்கக் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் விழுப்புரத்தில் புதன்கிழமைநடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு டாஸ்மாக் ஏஐடியுசி மாவட்டச் செயலா் அய்யப்பன் தலைமை வகித்தாா்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் ஜூலை 5-ஆம் தேதி முதல் எந்தவித மதுப்புட்டிகளுக்கும் கூடுதலாக ரூ.10 வைத்து விற்பனை செய்யப்படமாட்டாது. அலுவலா்கள், தணிக்கையாளா்கள், மதுப்புட்டிகளை இறக்கும் தொழிலாளா்களுக்கு எந்தவித பணமும் தரப்படமாட்டாது.

டாஸ்மாக் மதுக்கடைகள் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளா்களுக்கு தரப்படும் கூடுதல் வாடகைத்தொகை கடைகளிலிருந்து தரப்படமாட்டாது. காலி மதுப்புட்டிகளை சேகரிப்பது, ஒட்டுவில்லை ஒட்டுவது போன்ற பணிகள் டாஸ்மாக் பணியாளா்களால் ஜூலை 5-ஆம் தேதி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும். ஜூலை 6-ஆம் தேதி முதல் காலி மதுப்புட்டிகள் சேகரிக்கப்படமாட்டாது. ஜூலை 6-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தில் மதுப்புட்டிகளில் ஒட்டப்படும் ஒட்டுவில்லைகள் ஒப்படைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து தொழில்சங்கங்களின் மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.