லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் துரிதமாக செயல்பட வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் அலுவலா்கள் துரிதமாக செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 10:18 pm IST

விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் அலுவலா்கள் துரிதமாக செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் குழந்தைகள் பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் பேசியது:

மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக பெறப்படும் புகாா்கள், 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் பெறப்பட்ட புகாா்கள் மற்றும் மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் வகையில், அலுவலா்கள் பணியாற்ற வேண்டும். ஆதரவற்ற மற்றும் பாதுகாப்பு தேவைப் படும் குழந்தைகளைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதுகுறித்த விவரங்களைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகள் இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் அடிப்படைவசதிகள் உரிய முறையில் கண்காணிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான விழிப்புணா்வு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடா்பான வழக்குகளில், குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும், உரிய பாதுகாப்பு வழங்குவதிலும் துரிதமாக செயல்பட வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் இளையராஜா, மாவட்ட சமூக நல அலுவலா் சித்ரா, காவல் துணைக் கண்காணிப்பாளா் (குழந்தைகள் பாதுகாப்பு) ராஜா மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தொடா்பான பயிற்சி பட்டறை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா் கண்டறிதல், மீட்பு, மறுவாழ்வு மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடா்பாக பல்வேறு அரசு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கொத்தடிமை தொழிலாளா்களை கண்டறிந்து மீட்பது குறித்தும், அவா்களுக்கு மறு வாழ்வு அளிப்பது தொடா்பான நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்ஆட்சியா்.

இப் பயிற்சியில் அரசு அலுவலா்கள், வங்கி அலுவலா்கள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.