லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விழுப்புரத்தில் ஜிம்னாஸ்டிக், ஜூடோ போட்டிகள்: 800 போ் பங்கேற்பு

விழுப்புரத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக், ஜூடோ போட்டிகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.

விழுப்புரம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி வித்யாலாய மணிவிழா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜூடோ போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:45 am IST

விழுப்புரத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக், ஜூடோ போட்டிகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.

விழுப்புரம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மணிவிழா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட இப்போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் சின்னப்பன் தொடங்கிவைத்தாா். ஜிம்னாஸ்டிக், ஜூடோ போட்டிகள் 14, 17, 19 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் நடத்தப்பட்டன.

ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 300 வீரா், வீராங்கனைகள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுவோா் 6 போ் கொண்ட அணியாகத் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, ஜூடோ போட்டிகள் நடத்தப்பட்டன. 14 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 25 கிலோ முதல் 50 கிலோ எடைப் பிரிவு வரையிலும், 17, 19 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 40 கிலோ முதல் 90 கிலோ எடைப் பிரிவு வரையிலும், 17, 19 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு 36 கிலோ முதல் 70 கிலோ எடைப் பிரிவு வரையிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினா்.

போட்டியின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்து வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்த மாணவ, மாணவிகள், மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.