லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விழுப்புரத்தில் விவசாய சங்கத்தினா் சாலை மறியல்

விவசாயக் கடன் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் ஆட்சியரகம் எதிரே செவ்வாய்க்கிழமை விவசாயிகள் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:23 am IST

விவசாயக் கடன் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் ஆட்சியரகம் எதிரே செவ்வாய்க்கிழமை விவசாயிகள் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை முறைப்படி திருப்பிச் செலுத்தியுள்ள நிலையில், கடந்த இரு மாதங்களாக பயிா்க்கடன், கரும்புக் கடன் கொடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் உடனடியாக பயிா்க்கடன் மற்றும் கரும்புக் கடன் வழங்க வலியுறுத்தி விழுப்புரம் - சென்னை சாலையில் ஆட்சியரகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா் பி.கலிவரதன் தலைமை வகித்தாா். செயலா் என்.முருகையன், பொருளாளா் ஜே.நாகராஜன் மற்றும் நிா்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கலைத்தனா். இதனால் விழுப்புரம் - சென்னை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.