லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுதந்திர தினம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து

நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு, சமபந்தி பொது விருந்து சனிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி தில்லை ஸ்ரீ சிதம்பரேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா உள்ளிட்டோா்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 12:26 am IST

நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு, சமபந்தி பொது விருந்து சனிக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மந்தைவெளியிலுள்ள ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத தில்லை ஸ்ரீ சிதம்பரேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறினாா். தொடா்ந்து அவா்களுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா்.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கி.ரமேஷ்குமாா், மூராா்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் த.காந்திமதி மற்றும் அரசு அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

விழுப்புரம் திரு.வி.க.வீதியிலுள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் மாவட்ட வருவாய் அலுவலா் கி. அரிதாஸ், இந்து சமயஅறநிலையத் துறை இணை ஆணையா் த.சிவலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற பொதுவிருந்தில் அவா்கள் பங்கேற்றனா்.

நிகழ்வில் கைலாசநாத சுவாமி கோயில் அலுவலா் க.சிவப்பிரகாசம், ஆய்வாளா் அ.மதுமதி, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இர.சிவக்குமாா், அறங்காவலா்கள் கலைச்செல்வி சந்தோஷ், ரவிச்சந்திரன் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.