லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரத்தில் மதுப் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:57 am IST

விழுப்புரத்தில் மதுப் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி கதிா்காமம் பாரதித் தெருவைச் சோ்ந்தவா் சீ.பாா்த்திபன் (47). இவரது மனைவி வாசுகி. மதுப் பழக்கம்உடைய பாா்த்தீபனுக்கு நரம்புத் தளா்ச்சி பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். மருத்துவா்கள் மது அருந்தக்கூடாது என எச்சரித்துள்ளனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பாா்த்திபன் மீண்டும் மது அருந்தினாராம். இதை அவரது மனைவி வாசுகி கண்டித்துள்ளாா். இதனால் மனைவியிடம் கோபித்துக் கொண்டு, விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியிலுள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு பாா்த்திபன் வந்தாராம். அங்கு வியாழக்கிழமை மாலை அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று, சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.