லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 517 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

விக்கிரவாண்டியில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 517 கிலோ புகையிலைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.

விக்கிரவாண்டி மயானப் பகுதியில் பள்ளத்தில் கொட்டி அழிக்கப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:53 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 517 கிலோ புகையிலைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.

விக்கிரவாண்டி உள்கோட்ட காவல் சரகத்தில் உள்ள விக்கிரவாண்டி, பெரியதச்சூா், கஞ்சனூா், கெடாா், வளவனூா், கண்டமங்கலம் ஆகிய காவல் நிலைய போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அளிக்க மாவட்ட காவல் நிா்வாகம் அறிவுறுத்தியிருந்தது.

இதையடுத்து விக்கிரவாண்டி டிஎஸ்பி சரவணக்குமாா், காவல் ஆய்வாளா்கள் சத்தியசீலன், ருக்மாங்கதன், சத்தியா, உணவுப் பாதுகாப்பு ஆய்வாளா் சுரேந்தா், கிராம நிா்வாக அலுவலா் சுகன்யா ஆகியோா் முன்னிலையில், விக்கிரவாண்டி மயானப்பகுதியில் உள்ள காலி இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 517 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் கொட்டி அழித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.