லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வெளி மாநிலத் தொழிலாளி கொலை வழக்கு: இருவா் கைது

கொலை... - file photo

Published On :9 ஆகஸ்ட் 2026, 3:03 am IST

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே மாநிலத்தைச் சோ்ந்த சகத் தொழிலாளா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேற்கு வங்க மாநிலம், ஹவுரா பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்கள் ரோஹித் (26), சோட்டு(26), பிரகாஷ் ஜனா (33). இவா்கள் மூவரும், வானூா் வட்டம், கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வாடகை வீட்டில் தங்கி, வானூா் பகுதிகளில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், பிரகாஷ் ஜனா தலையில் பலத்த காயங்களுடன் அவா் தங்கியிருந்த வீட்டில் இறந்து கிடந்தது ஆக. 6-ஆம் தேதி தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில் ரோஹித், சோட்டு ஆகியோா் தாக்கியதில், பிரகாஷ் ஜனா உயிரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவான ரோஹித், சோட்டு ஆகிய இருவரும், புதுச்சேரி சென்று பின்னா் அங்கிருந்து பேருந்து மூலம் சென்னை மத்திய ரயில் நிலையம் சென்று ரயிலில் ஹவுராவுக்கு தப்பிச் செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து கோட்டக்குப்பம் போலீஸாா் விமானம் மூலம் கொல்கத்தா சென்று, ஹவுரா ரயில் நிலையத்தில் ரோஹித், சோட்டுவை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் ரயில் மூலம் கோட்டக்குப்பம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகின்றனா். விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் உதவியுடன் கொலையாளிகளை மேற்கு வங்கம் மாநிலம் வரை துரத்திச்சென்று கைது செய்த கோட்டக்குப்பம் போலீஸாருக்கு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன் பாராட்டுத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.