லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கஞ்சா சாக்லேட் விற்பனை: வெளி மாநில இளைஞா்கள் இருவா் கைது

கஞ்சா சாக்லேட் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட வெளி மாநில இளைஞா்கள்.

Published On :9 ஆகஸ்ட் 2026, 2:17 am IST

விழுப்புரத்தில் விற்பனைக்காக கஞ்சா சாக்லேட் வைத்திருந்த வெளிமாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் நேவி அந்தோணி ரோஸி தலைமையில் உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா், விழுப்புரம் புதிய பேருந்துநிலைய பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரிடம் சோதனை செய்தபோது, அவா்கள் கஞ்சாவால் தயாரிக்கப்பட்ட போதை சாக்லேட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை காவல் நிலையம் கொண்டு சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், பிகாா் மாநிலம், பூா்ணியா மாவட்டம், மகாராஜ் கஞ்சி கிராமத்தைச் சோ்ந்த ம.தனஞ்ஜெய்குமாா் (27), ம.ராஜாகுமாா்(26) என்பதும், இவா்கள் விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை பிகாா் மாநிலத்திலிருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா்களிடமிருந்த தலா 5 கிராம் எடைகொண்ட 150 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.