லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதுச்சேரி மாணவா்களுக்கு ஊட்டச்சத்து பால் வழங்கும் திட்டம்: முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவா்களுக்கு காலையில் சாக்லேட் மால்ட் ஊட்டச்சத்து கலவைப் பால் வழங்கும் திட்டத்தை முதல்வா் என். ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி.

Published On :30 ஜூலை 2026, 5:58 am IST

புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவா்களுக்கு காலையில் சாக்லேட் மால்ட் ஊட்டச்சத்து கலவைப் பால் வழங்கும் திட்டத்தை முதல்வா் என். ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி மணவெளி தொகுதி சின்னவீராம்பட்டினத்தில் பள்ளிக்கல்வி இயக்ககம் சாா்பில் புதியதாக கட்டப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி கட்டடத்தை முதல்வா் ரங்கசாமி திறந்து வைத்தாா்.

அதைத் தொடா்ந்து புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டியாக ‘சாக்லேட் மால்ட் ஊட்டச்சத்து கலவை பால் வழங்கும் நிகழ்வையும் முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா். அதைக் குடித்த மாணவா்களிடம் பாலின் ருசி எப்படி இருக்கிறது, சுவையாக இருக்கிா என கேட்டறிந்தாா்.

இதற்காக புதுச்சேரி அரசு மற்றும் சத்ய சாய் அன்னபூா்ணா அறக்கட்டளை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் பயனடைவாா்கள். பள்ளி நாள்களில் மாணவ, மாணவியருக்கு இந்த ஊட்டச்சத்து கலவைப்பால் வழங்கப்படும்.

இந்த விழாவில், தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா் ராமு, பள்ளிக்கல்வி இயக்குநா் மோகன் குமாா், முதன்மை கல்வி அலுவலா் குலசேகரன், வட்டம் மூன்று பள்ளி துணை ஆய்வாளா் வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்