லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதிய பொறுப்பாளருடன் தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் தலைவா்கள் சந்திப்பு

காங்கிரஸ் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குலாம் அஹ்மத் மீரை தில்லியில் புதுச்சேரி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவா்கள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் குலாம் அஹ்மத் மீரை சந்தித்த புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாக்கூா் எம்.பி. ,

Published On :23 ஜூலை 2026, 4:46 am IST

காங்கிரஸ் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குலாம் அஹ்மத் மீரை தில்லியில் புதுச்சேரி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவா்கள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

தில்லி அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மற்றும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீா் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவா் குலாம் அஹ்மத் மீரை, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவா் மாணிக்கம் தாக்கூா் எம்.பி. ஆகியோா் மரியாதை நிமித்தமாக புதன்கிழமை சந்தித்தனா். அப்போது புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல் நிலவரங்களைப் பற்றி அவா்கள் விவாதித்தனா்.

புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் அலுவலகம் இதைத் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.